10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும், 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேரடி வகுப்பிற்கு பதிலாக ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்தால் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து, நேரடி வகுப்புகளை ரத்து செய்வது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
High court has given good advice. Govt should follow this.
ReplyDelete