திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்: படையியல்
அதிகாரம்: படைமாட்சி
குறள் எண்: 762
குறள்:
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது
பொருள்:
போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.
பழமொழி :
Anything valued where it belongs.
எதுவும் இருக்கிற இடத்தில் இருந்தால் தான் மதிப்பு.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஒவ்வொருவருக்குள்ளும் தனித் திறமை எனும் நெருப்பு உண்டு அதை எரிய வைப்பது அவரவரின் கடமை.
2. மாணவ வாழ்க்கை ஒரு படிக்கட்டு போல அதில் ஏறுவதும் இறங்குவதும் அவரவர் திறமை
பொன்மொழி :
ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை. அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது..........காந்தியடிகள்
பொது அறிவு :
1. சமூக நீதிக்கான "அன்னை தெரசா விருது 2021" யாருக்கு வழங்கப்பட்டது?
அனில் பிரகாஷ் ஜோஷி.
2. இளஞ்சிவப்பு காவல் படை எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?
கோவா.
English words & meanings :
Minor - not old enough to do legal things, சட்டபடி சில பணிகள் செய்யும் வயது இல்லாதவர்,
Minor - an unimportant thing, முக்கியமற்ற
ஆரோக்ய வாழ்வு :
நெய்யின் நன்மைகள்
நெய்யில் வைட்டமின் K, A, மற்றும் E உள்ளது. இது கண்கள் மற்றும் சருமத்தை பாதுகாப்பதுடன் இரத்ததையும் சுத்தப்படுத்தும்.
நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இது வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.
நெய் எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இது வலுவைத் தருவதுடன் உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கின்றது.
கணினி யுகம் :
Ctrl + ` - Grave Accent.
Ctrl + Alt + . - Insert Ellipsis
நீதிக்கதை
நாளைய உணவு
சில வெள்ளாடுகளும், செம்மறி ஆடுகளும் தன் குட்டிகளுடன் புல்வெளியில் மேயந்து கொண்டிருந்தன. அப்போது செம்மறி ஆட்டுக்குட்டிகள் நுனிக் கொழுந்துகளாகப் பார்த்து மேய்ந்து கொண்டிருந்தன. அதைக்கண்ட வெள்ளாடு, என் அருமை செம்மறிக்குட்டிகளே, இப்படி நுனிக்கொழுந்தாக மேய்ந்தால் நாளை நமக்கு உணவு கிடைக்காது. அதனால் கூடுமானவரை, நுனிக்கொழுந்தைக் கடிக்காதீர்கள். இன்று ஒருவருக்கு மட்டுமே உணவாகும் அது, தழைத்து வளர்ந்தால் நாளை நம் அனைவருக்கும் உணவாகும் என்றது.
அதைக்கேட்ட செம்மறி ஆடு, நீ உன் வேலையைப்பார். என் குட்டிகளுக்கு எது இஷ்டமோ, அதைத்தான் உண்ணும். நீ ஒன்றும் அதைச்சாப்பிடு, இதைச்சாப்பிடாதே என கட்டளையிட வேண்டாம் என்றது காட்டமாய். ஆனால் வெள்ளாடு, தன் குட்டிகள் நுனிக் கொழுந்தை கடிக்கவிடாமல் கவனமாய் பார்த்துக்கொண்டது.
சில நாட்கள் சென்றன. செம்மறி ஆடுகள் மேய்ந்த இடத்தில் ஒரு இலை தழைக்கூட காணவில்லை. நுனிக்கொழுந்து கடிபட்ட செடிகள் தழைக்க நாளாகும் அல்லவா? ஆனால், வெள்ளாடுகள் மேய்ந்த இடங்களில் பசுமை தெரிந்தது. நுனிக்கொழுந்துகள் காக்கப்பட்டதால், இப்பொழுது அவைகள் சாப்பிடும் பக்குவத்தில் தழைத்து வளர்ந்திருந்தன. வெள்ளாடுகள் வழக்கம்போல் எந்தத் தடையுமியின்றி மேயத்தொடங்கின. ஆனால், செம்மறி ஆடுகள் செய்வது அறியாது திகைத்து நின்றன.
அடுத்தவர் பேச்சைக் கேட்பதா...? என நினைத்த செம்மறி ஆடுகள், தங்களுடைய அடங்காத குணத்தால் இப்பொழுது திண்டாடுவதை உணர்ந்தன. அருகில் கிடைத்த உணவை பாதுகாக்கத் தெரியாததால், அவைகள் வேறு இடம் தேடிச் சென்றன. இன்றைக்கு நிறைய உணவு கிடைக்கிறது என்பதற்காக, அவற்றை வீணாக்கக் கூடாது. அது நம்முடைய நாளைய உணவாகக் கூட இருக்கலாம் என்பதை செம்மறி ஆடுகள் உணர்ந்து கொண்டன.
நீதி :
சேமிக்க பழக வேண்டும்.
இன்றைய செய்திகள்
10.12.21
★தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
★மணல் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க, ஒரு யூனிட் ஆற்று மணலுக்கு ரூ.1000-ஐ விலையாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
★அனைத்துவித பல்கலைக்கழகங்களும் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றுஉயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
★இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜனவரி 4-வது வாரம் தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
★வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைவரும் வீட்டில் 7 நாட்கள் கண்டிப்பாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விதிமுறை வரும் 11-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசின் புதிய விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
★60வயதுக்கு மேற்பட்டோர், மருத்துவ மற்றும் சுகாதார முன்களப்பணியாளர்கள், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கான பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான பதிவு கோவின் தளத்தில் தொடங்கியது.
★பி டிவிசன் கைப்பந்து போட்டியில் ஐ.சி.எப். அணி ‘சாம்பியன்' பட்டம் வென்றது.
★புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் அணி வெற்றி.
Today's Headlines
★ As the curfew ends in Tamil Nadu today, Chief Minister Stalin is scheduled to hold consultations with medical experts and officials today.
★ To avoid irregularities in sand quarries, the Government of Tamil Nadu has issued an order to fix a price of Rs.1000 per unit of river sand.
★ The Department of Higher Education has ordered all universities to change the curriculum.
★ Consultation for undergraduate medical courses begins in the 4th week of January, said Health Minister Ma Subramanian.
★ All returnees from abroad must be isolated at home for 7 days. The new rule of the central government states that this rule will come into effect from the 11th.
★ Registration for booster dose or precautionary dose vaccination for over 60s, medical and health pioneers, and those with comorbidities has begun on the Govt site.
★ ICF in B Division Volleyball Tournament. The team won the title of ‘Champion’.
★ Pro Kabaddi League: Patna Pirates win.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...