கொரோனா அதிகரிக்கும் அச்சம். ஆசிரியர்களுக்கான பயிற்சியினை ஒத்திவைக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர் *பி.கே.இளமாறன்*
அறிக்கை.
கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப்பாராட்டு கின்றேன்.இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 9 ஆம் வகுப்புகள் எடுக்கும் தொடக்க,நடுநிலை, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுத்திறன் பயிற்சி 1001.2022 முதல் 25.02.2022 வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அட்டவணை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
கற்றல் அடைவுத் திறன் குறித்த பயிற்சி அளிப்பதை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. இருந்தாலும் தற்போது கொரனோ அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி பயிற்சி எடுப்பது நோய்த் தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும். கணினி ஆய்வுக் கூடங்களில் அரசு வழி வகுத்துள்ள கொரனா தடுப்பு நடவடிக்கைகள் முழுமையாக கடைபிடிக்க இயலா சூழ்நிலை ஏற்பட்டு ஆசிரியர்களுக்கு கொரனா தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
ஒவ்வொரு பயிற்சிமையத்திலும் நூறு ஆசிரியர்களை ஓரிடத்தில் பயிற்சிக்காக வரவழைக்கும் படும்போது நோய்த் தொற்றுதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் கடைபிடிக்க நேர்ந்தாலும் இடவசதி மற்றும் கணினி ஆய்வகங்களின் அமைவிடம் மற்றும் ஒரு கணினி மற்றும் பிற கணினிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை கணக்கில் கொண்டால் கூட அவை குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி என்ற அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன எனவே கொரானா தொற்று குறைந்த பிறகு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்வது சாலச் சிறந்ததாக இருக்கும்.
மேலும் மாண்புமிகு மருத்துவம்,சுகாதாரதுறை அமைச்சர் அவர்கள் பிப்ரவரி மாதம் வரை கொரோனா உச்சத்தைத்தொடக் கூடிய நிலையில் உள்ளது என்றும் தற்போது சுனாமி அலைபோன்று பரவிவருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு கொரோனா குறைந்தபிறகுஆசிரியர்களுக்கு கற்றல் அடைவுத்திறன் பயிற்சி வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
*பி.கே.இளமாறன்*
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...