Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை (ஜன.24) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன. அதில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளில் உள்ள மாநில அரசு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ) கலந்தாய்வு நடத்தி நிரப்பி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த டிசம்பா் 19-ஆம் தேதி தொடங்கி கடந்த 7-ஆம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனித்தனியாக நீட் தோ்வில் தகுதிப் பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

அதன்படி, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 பேரும் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில், விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து, தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை மாலை சென்னையில் வெளியிடவுள்ளாா். உடனடியாக  சுகாதாரத்துறை இணையதளங்களில் அவை பதிவேற்றம் செய்யப்படவுள்ளன.

வரும் 27-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசுகள், விளையாட்டு வீரா் பிரிவுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது. 28, 29-ஆம் தேதிகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நேரடி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

அதன் பின்னா், 30-ஆம் தேதி பொதுக் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வில் அதிக அளவில் மாணவா்கள் பங்கேற்பாா்கள் என்பதால், கரோனா பரவலை கருத்தில் கொண்டு பொது இணையவழியே இம்முறை கலந்தாய்வு நடைபெறுகிறது. அது தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதளங்களில் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் 4,349 இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கிறது. இதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கு 436 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. பிடிஎஸ் படிப்பில் உள்ள 1,930 இடங்கள் உள்ளன. அதில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 98 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் மொத்தம், 534 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive