கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு 31.01.2022 வரை மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கண்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன . இந்நிலையில் , மாணவர்கள் இன்றி பள்ளிகள் செயல்படுவதால் 22.01.2022 அன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
Home »
Padasalai Today News
» Flash News : வரும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.







விடுமுறை அறிவிப்பு அரசாணைகள் , பள்ளிகளை மூடுவது பற்றிய அரசாணைகள் என இதை மட்டுமே முழு நேர தொழிலாகக் கொண்டுள்ள கல்வித்துறைக்கு வாழ்த்துக்கள். ஓர் அரசுப்பள்ளி ஆசிரியர் அச் என்று தும்மினாலே அவருக்கு மாதக்கணக்கில் விடுப்பு கொடுத்து, லட்சக்கணக்கில் மாத சம்பளமும் அளித்து சகல அரசு மரியாதையுடன் அவரை குளிப்பாட்டி மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பணியை மட்டுமே கடந்த மூன்று வருடங்களாக கல்வித்துறை கொரோனாவைக் காரணமாக வைத்து செய்து வருகின்றது. இங்கே பல தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொரு முறை லாக்டவுன் வரும்போதும் | மானம் கெட்டு மரியாதை கெட்டு, கால்சம்பளம் , அரைச்சம்பளம் , ஒரு மணிநேர ஆன்லைன் வகுப்புக்கு 100 ரூபாய் 50 ரூபாய் என்று கூலித்ெ ழிலாளியை விடவும் கேவலமாய் நடத்தப்படுவது மட்டும் வசதியாக யார் கண்களுக்கும் தெரியவில்லை.
ReplyDelete