பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் , பார்வை 4 ல் காணும் இவ்வியக்கக செயல்முறைகள்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . அதன் தொடர்ச்சியாக தற்போது கூடுதல் அறிவுரைகள் கீழ்க்காணுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாணை ( நிலை ) எண் .113 , மனித வள மேலாண்மைத் ( கே ) துறை , நாள் .13.10.2021 ல் கீழ்க்கண்டவாறு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன . 2016 , 2017 மற்றும் 2019 ம் ஆண்டு ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப்போராட்ட காலங்கள் ( 10.02.2016 முதல் 19.02.2016 வரை 22.08.2017 ( ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ) , 07.09.2017 முதல் 15,09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 வரை பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன . மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டங்களுடன் தொடர்புடைய தற்காலிகப் பணி நீக்கக் காலமும் , பணிக்கலாமாக முறைப்படுத்தப்படுகிறது. அவ்வேலை நிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன . அவ்வொழுங்கும் நடவடிக்கைகளின் காரணமாக , பதவி உயர்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் , அதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். வேலை நிறுத்தப் போராட்டத்தின போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை , அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமையினை வழங்க , பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே . மேற்காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு பின்வரும் அறிவுரைகளை தவறாது பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் 2019 - 2020 ம் கல்வியாண்டு 01.01.2019 முன்னுரிமை பட்டியலில் வரும் ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வுக்கு முந்தைய நாளில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். காலிப்பணியிடம் இல்லாத நிகழ்வில் இல்லாத நிகழ்வில் இளையவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பின் அவ்வாசிரியரை பணியிறக்கம் செய்து அன்னார்க்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
* நிர்வாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டிருப்பின் அவர்களுக்கு அந்தந்த மாறுதல் கலந்தாய்வு நாளுக்கு முன்னர் முன்னுரிமை அடிப்படையில் காலியாக உள்ள இடங்களில் விருப்பம் தெரிவிக்கும் பள்ளிக்கு மாறுதல் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
* மனமொத்த மாறுதல் ( Mutual Transfer ) மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் ( Unit transfer ) சார்பான விண்ணப்பங்கள் , பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...