தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்புடம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதேபோல், தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடத் தவறினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த அரசாணையில், தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனத்திற்கு வெளியே சரக்குகள், கம்பிகள் இருந்தால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...