60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Total Pageviews

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.10.22

 


 

  திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் : 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

பொருள் :
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்

பழமொழி :

Caution is the parent of safety

முன்னெச்சரிக்கையே பாதுகாப்பிற்கு பிதா.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பள்ளியின் கட்டளைகளுக்கும் அரசு கட்டளைகளுக்கும் கீழ் படிவேன்.

 2. அதுவே நானும், நாமும், நாடும் சிறக்க உதவும் என்று அறிவேன்.

பொன்மொழி :

அழுகையை ரசிப்பவர்கள் தான் ஆனந்தமாய் சிரிக்க முடியும்.

பொது அறிவு :

1. டி என் ஏ (D.N.A )என்பது யாது? 

டியாக்சிரிபோ நீயூக்ளியோ ஆசிட்

. 2. உலக போலியோ நோய் ஒழிப்பு தினம் எப்போது? 

ஏப்ரல் 7.

English words & meanings :

Jarina - a short South American palm tree. Noun. குட்டையான தென் அமெரிக்க பனை மரம். பெயர்ச் சொல்.

ஆரோக்ய வாழ்வு :

கொத்தவரங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதை அடிக்கடி சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

NMMS Q :

நீரில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் நிறைவிகிதம் - விடை : 1 : 8

அக்டோபர் 21


ஆல்ஃபிரட் நோபெல் அவ்ர்களின் பிறந்நாள்ஆல்ஃபிரட் நோபெல் Alfred Bernhard Nobel (உதவி·தகவல்)(பிறப்பு:(சிட்டாக்கோம், சுவீடன், 21 அக்டோபர் 1833 – Sanremo, இத்தாலி, 10 திசம்பர் 1896)) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.

நீதிக்கதை


ஆந்தைக் கூட்டம்

ஒரு காட்டில் சிரஞ்சீவி எனும் காகம் நெடுநாட்களாக ஆந்தைக் கூட்டத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு திட்டம் தீட்டியது. அத்திட்டத்தின்படி சிரஞ்சீவி என்ற காகம் ஒவ்வொரு நாளும் ஒரு சுள்ளி என, நாள்தோறும் சுள்ளிகளை எடுத்து வந்து ஒரு குகையின் வாயிலில் நிறைத்து கொண்டே வந்தது. சிரஞ்சீவியின் நடத்தையில் எந்தவித சந்தேகமும் யாருக்கும் ஏற்படவில்லை. பகற்பொழுதில் கண்பார்வையற்ற ஆந்தைக் கூட்டம் குகைக்குள் அடைந்து, தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் தக்க தருணம் என்று நினைத்த சிரஞ்சீவி அந்தக் குகையைவிட்டு வெளியேறியது. 

தன்னுடைய காகராஜனைச் சந்தித்த சிரஞ்சீவி, ராஜா! உடனடியாக, எல்லாக் காகங்களையும் அழைத்து, அவர்களிடம் ஆளுக்கொரு எரியும் கொள்ளியைக் கொடுங்கள். ஆந்தையின் குகை வாசலில் நான் குவித்து வைத்துள்ள சுள்ளிக்குவியலில் வைத்து விடட்டும். உடனே, குகையின் வாசல் தீப்பற்றி எரியும். ஆந்தைக் கூட்டம் அனைத்தும் அந்தத் தீயில் வெந்து அழியும் என்றது சிரஞ்சீவி. 

சிரஞ்சீவியின் திட்டப்படி, காகராஜா தன் காகக் கூட்டத்தை அழைத்துக்கொண்டு எரியும் கொள்ளியுடன் ஆந்தைக் குகையை அடைந்தது. அங்கு சிரஞ்சீவி குவித்துவைத்துள்ள சுள்ளிகளில் தீயை மூட்டியது. நெருப்பும் புகையும் குகைக்குள் மண்டியதில் ஆந்தைகள் அனைத்தும் அழிந்தன. 

ஆந்தைக் கூட்டம் அழிந்த பின்னர், காகராஜா தன்னுடைய பழைய ஆலமரத்தில் வழக்கம்போலத் தன்னுடைய அரசாட்சியை நடத்தி வந்தது. பின் காக ராஜன் சிரஞ்சீவியை அரசவைக்கு அழைத்து, நீ எப்படி ஆந்தைக் கூட்டத்தை நம்பவைத்து ஏமாற்றினாய் என்று எங்களுக்கு விளக்கிக் கூறு என்று கேட்டது. 

நெருப்பு தன் வலிமையால் காட்டையே அழிக்கவல்லது. மரங்கள் தன் வேர்களை நிலத்தில் ஊன்றி இருந்தாலும், மிருதுவான தன்மை கொண்ட தண்ணீர்ரும் காற்றும் மரங்களை வேரோடுப் பிடுங்கிச் சாய்த்து விடுகின்றனவே அது போலத்தான் நானும் செய்தேன் என்றது சிரஞ்சீவி. 

நீதி :
எதிரியை அழிக்க தகுந்த நேரம் வரும் வரை காத்திருந்து புத்தியால் அழிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

21.10.22

*பசுமை தமிழகம் திட்டம்: 2.50 கோடி மரக்கன்றுகளை இந்த மழைக் காலத்திலேயே நட அறிவுறுத்தல்.

*ஆசிரியர் நியமனத்திற்கான உச்ச வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

*கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க கூடாது: அகர்வால் மருத்துவமனை அறிவுறுத்தல்.

*எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு தொடங்கியது: சிறப்பு பிரிவில் 65 பேருக்கு கல்லூரி ஒதுக்கீடு.

*இந்தியாவில் ‘ஏகே 203’ துப்பாக்கிகள் தயாரிப்பை விரைவில் தொடங்க ரஷ்யா திட்டம்.

*பணவீக்கத்தால் வாழ்க்கை செலவு அதிகரிப்பு: பிரிட்டனில் ஒரு நாள் உணவை தவிர்க்கும் லட்சக்கணக்கான மக்கள்.

* டி20 உலகக் கோப்பை: வெளியேறியது நமிபியா- சூப்பர் 12 சுற்றுக்கு நெதர்லாந்து முன்னேற்றம்.

* உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

* 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த போட்டி: முதன்முறையாக 3 பதக்கங்கள் வென்று இந்திய வீரர்கள் சாதனை.

Today's Headlines

* Green Tamil Nadu Scheme: Instructions to plant 2.50 crore saplings this monsoon.

* The Tamil Nadu government has ordered to increase in the upper age limit for the appointment of teachers.

* Don't burst crackers while wearing contact lenses: Agarwal Hospital advises.

* MBBS, BDS Counseling Begins: College Allotment for 65 Candidates in Special Category

 * Russia plans to start production of 'AK 203' rifles in India soon.

 * Cost of living rises due to inflation: Millions skip a day's meal in Britain

 * T20 World Cup: Namibia exit, Netherlands advance to Super 12 round

 * Indian team won the gold medal in the World Shooting Championship.

 *  Under-23 WorldWrestling Championship: Indian athletes won 3 medals for the first time
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Blog Archive