NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை

சென்னையை தவிர்த்து தமிழகத்திலுள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்களை தோற்றுவிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஓசூர், தஞ்சையில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்ண்டுள்ளனர். வருவாயை பெருக்குதல் உள்ளிட்ட காரணங்களால் புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய சூழலில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி தவிர இதர மாநகராட்சிகளுக்கான தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996 உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் 01.10.1996 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்படி அரசாணையில், நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் தோற்றுவிக்கப்படாத நகராட்சிப் உயர்த்தப்படும்போது, மாநகராட்சிகளில் பணியிடங்களை மாநகராட்சிப் பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும், பொது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு மாநகராட்சியும் பின்வரும் நான்கு பிரிவுகளைக் கொண்டு இயங்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணியாளர் பிரிவு (Personnel Wing), வருவாய் மற்றும் கணக்கு பிரிவு (Revenue & Accounts Wing), பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு (Engineering & Water Supply Wing), பொது சுகாதாரப் பிரிவு (Public Health Wing) ஆகிய நான்கு பிரிவுகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தமிழ்நாடு மாநகராட்சிப் பணி விதிகள் 1996 தொடர்பாக பல்வேறு சங்கங்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளுக்கு தெளிவுரைகள் வெளியிடப்பட்டது. மாநகராட்சிகளின் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தமிழ்நாட்டில் தற்போது (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) மொத்தம் உள்ள 20 மாநகராட்சிகள் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது நகராட்சி நிருவாக இயக்குநாகத்தின் கீழ் அரசுக்கு அனுப்பிய நகராட்சி நிருவாக இயக்குநரின் கருத்துருவில், தமிழ்நாட்டிலுள்ள 20 தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும். ஏற்கெனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்துவது தொடர்பாக கீழ்க்காணும் விவரங்களை தெரிவித்துள்ளார்:

மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஓசூர், நாகர்கோவில், ஆவடி, தாம்பரம், கடலூர், சிவகாசி, கரூர், கும்பகோணம் ஆகிய மாநகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

மாநகராட்சிகளின் தற்போதைய நிலவரப்படியான மக்கள் தொகைக்கு ஏற்றவாறு, மாநகராட்சி பணியிடங்கள் ஒரே சீராக இல்லை. மேலும், சிறப்பு நிலை நகராட்சிகளிலிருந்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்ட தூத்துக்குடி. திருப்பூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல், தஞ்சாவூர் முதலான மாநகராட்சிகளில், சில சிறப்பு நிலை நகராட்சிகளில் காணப்படும் பணியிடங்களுக்கும் குறைவான பணியிடங்களே உள்ளன.

மேலும், புதிதாக மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர். கும்பகோணம் ஆகிய 6 மாநகராட்சிகளிலும் சீரான நிர்வாகம் மற்றும் திட்டப் பணிகள் செயல்படுத்துதல், நகரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளுதல், பொதுமக்கள் சேவை மேம்படுத்துதல், வருவாய் பெருக்குதல் ஆகியவற்றை தொய்வின்றி செயல்படுத்த போதுமான பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது.

எனவே, மேற்படி 20 மாநகராட்சிகளை அவற்றின் மக்கள் தொகையின் அடிப்படையில் பின்வருமாறு நான்கு வகைப்படுத்தி, அவற்றிற்கு ஏற்ற நிலையினை நிர்ணயம் செய்யலாம் என நகராட்சி நிருவாக இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive