Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

பள்ளிக்கல்விதுறையின் உயர் அலுவல் கூட்டம் மே 22-ம் தேதி நடைபெறுகிறது!

 .com/

சென்னையில் செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று கூறியதாவது: மாணவர்கள் இடைநிற்றலை கண்காணிக்க இந்தஆண்டு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படுகிறது.


அதன்படி,எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றுபாலிடெக்னிக், ஐடிஐ செல்பவர்களுக்கு, பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள எமிஸ் எண்ணைக் கொண்டு சேர்க்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம், எஸ்எஸ்எல்சி முடித்தவர்கள் எந்தெந்த படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் கிடைக்கும். கல்வியைதொடராத இடைநிற்றல் மாணவர்களை அடையாளம் காண்பதும் எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


பள்ளிக்கல்வி இயக்குநர் யார்? - பள்ளிக்கல்வி துறை இயக்குநர் பணியிடம் நீக்கப்பட்டு, துறை ஆணையரிடம் அதன் பொறுப்புகள் கடந்த 2021 மே 14-ம் தேதி வழங்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும், பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமாரே அனைத்து பணிகளையும் கவனித்து வந்தார்.இந்நிலையில், அந்த பொறுப்பில் இருந்து அவர் சமீபத்தில் மனிதவள மேம்பாட்டு துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது ஆணையர் பதவியை ரத்து செய்து, மீண்டும் இயக்குநர் பணியிடத்தை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


இதுகுறித்து அமைச்சர் அன்பில்மகேஸ் கூறும் போது, ‘‘பள்ளிக்கல்விதுறையின் உயர் அலுவல் கூட்டம்மே 22-ம் தேதி நடைபெறுகிறது. அதில், இயக்குநர் பணியிடம் குறித்து முடிவுசெய்யப்பட்டு, தகுதியானவர்கள் பட்டியல் முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். முதல்வர் இறுதி முடிவை எடுப்பார்’’ என்றார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive