Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறைகளைத் தடுக்க ஆசிரியர்கள் கருத்துகள் தெரிவிக்க அழைப்பு!

1200-675-19614046-thumbnail-16x9-scho

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும், சாதி தொடர்பான வன்முறை தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

சென்னை:தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரியில் ஏற்படும் சாதிய தொடர்பான வன்முறை தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் casteviolencecommiteechandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதிய மனப்பான்மையால் மாணவர்களிடம் வன்முறை சமீப காலமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலியில் துவங்கிய சம்பவம், திருவண்ணாமலை வரையில் தொடர்ந்தது. தற்போது, கல்லூரி மாணவர்களும் தங்களுக்குள் வன்முறைச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் நிலவும் போக்குதான் மாணவர்களிடம் சாதிய வன்மம் அதிகரிக்கக் காரணமாக கூறப்படுகின்றன.


மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்தக் குழு இது தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து, ஆக்கப்பூர்வமான முறையில் சாதி, இன பேதமற்ற சமூகத்தை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உடன் இணைந்து, அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள், உந்துதல்கள் (Motivation) தொடர்பான அறிக்கைகள் அளித்திட வேண்டும்.மாணவர்கள் தங்களது குறைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவான அமைப்பை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும். இந்தக் குழு மேற்படி பொருள் தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று அரசுக்கு அறிக்கையாக அளித்திட வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.

இது தொடர்பான பள்ளிக்கல்வித் துறையின் சுற்றறிக்கையில், "ஒரு நபர் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, பள்ளி, கல்லூரிகளில் சாதிய அடிப்படையிலான வேறுபாடற்ற சூழலை உருவாக்குவது சார்ந்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் (Terms of References) அடிப்படையில் இப்பொருள் சார்ந்து கல்வி நிறுவனங்கள் சார்பிலான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் குழுவின் மின்னஞ்சல் முகவரி அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்திடக் கோரும் கடிதத்தினை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி உரியத் தகவல் தெரிவித்திடக் கோரியுள்ளார்.சாதிய வன்முறைகளைத் தடுப்பது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தலைமை ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிற்கு அனுப்பி வைக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார்.மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் casteviolencecommiteechandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 147, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 4 என்ற முகவரியில் கடிதம் மூலம் அனுப்பி வைக்கலாம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive