Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொங்கல் திருநாள் பற்றிய கட்டுரை

 
 
தமிழர்கள் பல விழாக்களை கொண்டாடுகின்றனர் அதில் முக்கியான விழாவான பொங்கல் திருநாள் பற்றிய கட்டுரை பதிவை இதில் காணலாம்.

இந்த பொங்கல் திருநாள் தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை எடுத்துக் காட்டுகின்றது.

பொங்கல் திருநாள் பற்றிய கட்டுரை

 

குறிப்பு சட்டகம்

அறிமுகம்

போகிப் பொங்கல்

தைப் பொங்கல்

மாட்டுப்பொங்கல்

காணும் பொங்கல்

பொங்கல் வாழ்த்துக்கள்

கோலங்கள்

முடிவுரை

அறிமுகம்

தமிழர்கள் எண்ணற்ற விழாக்களை கொண்டாடி மகிழ்கின்றனர். அவற்றில் மிகவும் முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள் ஆகும்.

இப்பண்டிகை தமிழ் கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தும் திருவிழாவாகக் காணப்படுகின்றது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தமிழர் தம் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடுகின்றனர்.

இப்பொங்கல் பண்டிகையானது நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் திருநாள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

 போகிப் பொங்கல்:

பொங்கல் பண்டிகையின் முதல் நாள் போகி ஆகும். பழையன கழிதல் புதியன புகுதல் என்பது போகி தினத்தின் சாராம்சமாகும்.

தமிழர் தம் வேளாண்மைச் சுழற்சியில் கடைசி நாள் இதுவாகும். இது மார்கழிக் கடைசி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. தற்போதைய காலங்களில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை மாற்றும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தைப் பொங்கல்:

பொங்கல் பண்டிகையின் பிரதான தினம் இதுவாகும். தைப் பொங்கலானது இரண்டாவது பொங்கல் தினமாகும். குறிப்பாக தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகின்றது.

 

இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்துத் தரப்பு தமிழ் மக்களினாலும் கொண்டாடப்படுகின்றது.விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய அத்தனை நாளும் உழவர் தமக்கு உதவிய சூரியனுக்கு பொங்கல் வைக்கும் தினமாகும். அன்றைய தினம் குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுடனும் உறவினர்களுடனும் இணைந்து கொண்டாடி மகிழ்வர்.

மாட்டுப் பொங்கல்:

வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழா மாட்டுப்பொங்கல் ஆகும். இது மூன்றாம் நாள் விழாவாகும்.

குறிப்பாக இந்நாளில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் காளை மாட்டிற்கும்⸴ இல்லத்தை செழிப்புற செய்யும் பசு மாட்டிற்கும் பொங்கலிடும் நாளாகும்.

அன்றைய தினம் மாடுகளின் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு⸴ மாடுகளை குளிப்பாட்டி⸴ கொம்பு சீவி⸴ வண்ணம் பூசி⸴ உழவுக்கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்து பொங்கி மகிழ்வர்.

காணும் பொங்கல்:

நான்காவது நாள் கொண்டாடப்படும் விழா ஆகும். இதனை கன்னிப்பொங்கல் என்றும் அழைப்பார்கள். இதில் உற்றார் உறவினரை சந்தித்தல், பெரியோர்களிடம் ஆசி பெறுதல், விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

பொங்கல் வாழ்த்துக்கள்:

பொங்கல் தினத்தில் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் உள்ளது. அச்சுப் பதிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக தற்போது குறுஞ்செய்திகள் பரிமாறப்படுவது அதிகமாக உள்ளது.

நவீன வளர்ச்சியின் காரணமாக தொலைத்தொடர்பு வளர்ந்து வருவதால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. எனினும் பொங்கல் பண்டிகையில் வாழ்த்துக் கூறும் சாராம்சம் மாறவில்லை.

கோலங்கள்:

பொங்கல் தினத்தில் தமிழ்ப் பொண்கள் பல வகைக் கோலங்களைப் போட்டு விழாவைச் சிறப்பிப்பார்கள். ரங்கோலிக் கோலம் உட்பட பல கோலங்கள் போடப்படும்.

நாகரீக வளர்ச்சியில் கலாசாரத்தின் தாக்கம் மற்றக் கலாசாரத்தின் மீது படிவது சாத்தியமான ஒன்றாகும். ஆனால் பொங்கல் பண்டிகை மற்றைய கலாசாரத்தைத் தம்முடன் இணைத்துக் கொண்டு மென்மேலும் சிறப்புப் பெறுகின்றது.

இதற்குச் சான்றாகவே விதம் விதமான கோலங்களைத் தமிழ்ப் பெண்கள் போடுவதைத் தமிழ்க் கலாசாரம் ஒருபோதும் தடுப்பதில்லை. 

முடிவுரை:

இவ்வாறாக பொங்கல் பண்டிகையானது கோலாகலமாகக் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் நன்றி மறவாமை பண்பினை உலகிற்கு பறை சாற்றுவதாகவும் உள்ளது





3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive