Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.03.2024

 

  

பொட்டாஷ் படிகாரம்





திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:368

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

விளக்கம்:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

பழமொழி :

Once bitten twice shy

சூடுபட்ட பூனை அடுப்பண்டை சேராது

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

ஒரு கதவு மூடப்படும்
போது இன்னொரு
கதவு திறக்கிறது.
ஆனால் பல நேரங்களில்
நாம் மூடிய கதவின்
நினைவிலேயே
இருப்பதனால்..
திறந்த கதவுகள் நம்
கண்களுக்கு தெரிவதில்லை.

பொது அறிவு : 

1. பொட்டாஷ் படிகாரம் ஒரு

விடை: இரட்டை உப்புகள்

2. குளிர் தொழில்நுட்பம் மூலம் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?

விடை: 123 K 

English words & meanings :

 Knotty - difficult to solve
புதிரான , விளக்க முடியாத
Kudos- praise given for an achievement பாராட்டுகள்

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை:கொடிப் பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் நீரும்.

மார்ச் 01

பாகுபாடுகள் ஒழிப்பு நாள்

பாகுபாடுகள் ஒழிப்பு நாள் (Zero Discrimination Day)  என்பது ஐநா மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். உலக நாடுகளில் சட்டத்திலும், நடைமுறையிலும்  மனித சமுதாயத்தில் தொடர்கிற பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அறைகூவல் விடுக்கும் நாளாக இது உள்ளது.  இந்த நாள் 2014 மார்ச் 1 அன்று முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இதை   பெய்ஜிங்கில் ஒரு முக்கிய நிகழ்வுடன் அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி ஐநா எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு அமைப்பின் (யுனெய்ட்ஸ்) நிறைவேற்று இயக்குனரான மைக்கேல் சிடிப் என்பவரால் தொடங்கப்பட்டது


நீதிக்கதை

 நாவினால் சுட்ட வடு


அது ஒரு அழகான வீடு. அழகான ஒரு குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு மகன் இருந்தான். அவன் எதற்கெடுத்தாலும் கோபப்படுவான் அதனால் அக்கம் பக்கத்தில் இருந்த பலர் அவனை வெறுத்தனர். இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று அவன் தந்தை நினைத்தார். உடனே தன் மகனைக் கூப்பிட்டார்,

"நீ திருந்தவே மாட்டாயா மகனே !" என்றார். அவனுக்கு அப்பா என்ன சொல்லப் போகிறார் என்பது புரிந்தது. அதற்கு அவன் "சரி! இனி கோபம் வராமல் இருப்பதற்கு முயல்கிறேன். ஆனால் முடியவில்லையே அப்பா!" என்றான்.

"சரி! நான் சொல்வது போல் செய். எப்பொழுதெல்லாம் உனக்குக் கோபம் வருகிறதோ அப்பொழுது ஒரு ஆணியை நம் தோட்டத்தில் உள்ள மரவேலியில் அடி" என்றார்.

அவனும் தனக்குக் கோபம் வரும்போதெல்லாம் ஆணியை மரவேலியில் அடித்து மரவேலியில் ஆணி பெருகிற்று.

சில நாட்கள் கழித்து அவன் கோபம் தணிந்தது. அறவே நின்று விட்டது என்று கூடச் சொல்லலாம். தன் தந்தையிடம் இந்த சந்தோஷச் செய்தியைச் சொன்னான். அவர் மகிழ்ச்சி கொண்டாலும், அவனை அழைத்து, "சரிமகனே! மிக்க மகிழ்ச்சி! அந்த ஆணிகளை இனி வேலியில் இருந்து பிடுங்கி விடு" என்றார் தந்தை. தன் தந்தை சொல்வதைக் கேட்டு அவனும் அப்படியே செய்தான்.

சில நாட்கள் கழிந்தன. "எல்லா ஆணிகளையும் மரவேலியிலிருந்து எடுத்து விட்டாயா மகனே?'' என்று தந்தை கேட்டதும், 'ஆம் தந்தையே! இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே?" என்றான் மகன்."ஆம் அப்பா! இருந்தாலும் என்னுடன் வா" என்று அவனை மரவேலி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

"இங்கே பார்! முதலில் நீ ஆணிகளை மரத்தில் அடித்தாய், பிறகு அதை மரத்திலிருந்து அப்புறப்படுத்தினாய்.

நீ செய்தது யாவும் சரியே. ஆனால் இங்கே பார் ! நீ மரத்தில் அடித்த வடு அப்படியே இருக்கிறதே ! அதை என்ன செய்வாய்?" என்று கேட்க, மகன் தலை குனிந்தான்.

'இனி கற்றுக்கொள்! தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. திருவள்ளுவர் சொல்லி யிருக்கிறாரே! அதனால் நாம் வசை மொழியினால் ஒருவரை கோபித்தால் அந்த வடு ஆழமாக மனதில் பதிந்துவிடும். அதனால் இனி கோபம் வராமல் பார்த்துக்கொள் " என்று கூறினார். இது அவனுக்கு மட்டும் அல்ல யாவருக்கும் பொருந்துவதே.

இன்றைய செய்திகள்

01.03.2024

* விவசாய உரங்களுக்கு ரூபாய் 24,420 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

* மருத்துவக் கல்லூரி படிப்பு இலவசம்; அமெரிக்காவின் புகழ்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரி அறிவிப்பு.

*பாம்பே ஜெயஸ்ரீ உட்பட 98 பேருக்கு சங்கீத நாடக அகடமி விருது அறிவிப்பு.

*சித்த மருத்துவத்தை உலக அளவில் கொண்டு செல்வது அவசியம்- ஆயுஷ் அமைச்சக இணை செயலர் பாவனா சக்சேனா.

* கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த புகழ்பெற்ற நடுவரான தென்னாப்பிரிக்காவை சேர்ந்த  மரைஸ் எராஸ்மஸ்.

Today's Headlines

*Rs 24,420 crore subsidy for agricultural fertilizers: Union Cabinet approves.

 * Medical college education is free;  Announcement of famous Albert Einstein College of USA.

 *Sangeetha Natak Academy award announcement for 98 people including Bombay Jayashree.

 *It is necessary to take Siddha medicine globally- Bhavana Saxena, Joint Secretary, Ministry of AYUSH.

 * Famous umpire Marais Erasmus from South Africa  announced his retirement from cricket.
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive