Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.03.2024

 

   




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல் :ஊழியல்
அதிகாரம் :ஊழ்

குறள்:375

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

விளக்கம்:

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

பழமொழி :

Perseverance kills the game

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

இரண்டொழுக்க பண்புகள் :

 1. கல்வியும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.

 2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்

பொன்மொழி :

வெற்றி என்பது குறிக்கோள் அன்று. அது ஒரு பயணமே. பயணம் தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

-ஆர்ஷேவிட்

பொது அறிவு : 

1. தொட்டவுடன் இறக்கும் பறவை எது?

விடை: டைட்டோனி பறவை 

2. இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக நிலக்கரி காணப்படுகிறது?

விடை: ஜார்கண்ட் 

English words & meanings :

 Quantum –a very small quantity of electromagnetic energy.
மின்காந்த ஆற்றலின் மிகைச்சிற்றளவு.
Quarrel (n) - dispute , disagreement சண்டை, கருத்து வேறுபாடு

ஆரோக்ய வாழ்வு : 

குப்பை மேனி கீரை : எல்லா வகையான புண்களுக்கும் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

நீதிக்கதை

 மூன்று கிணறுகள்


ஒரு முறை ஒரு மனிதன் தன் வீட்டைச் சுற்றித் தோட்டம் போட நினைத்தான். ஆனால் தோட்டத்திற்குத் தினமும்

தண்ணீர் பாய்ச்ச வேண்டுமே? அதனால் ஒரு கிணறு இருந்தா நல்லதென்று நினைத்தான்.கிணறு வெட்டுவதற்காக நிலத்தில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அவனுக்கு சரியாகப்பட்டதால் அந்த இடத்தில் கிணறு வெட்டத் தொடங்கினான்.

அவன் வெட்டிக் கொண்டே இருந்தான். இருபது முழம் ஆழம் வரை வெட்டினான். அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருபது முழம் வரை வெட்டியும் அந்த இடத்தில் தண்ணி்ர் ஊற்று எதுவும் தென்படவில்லையே என்று வருந்தினான். சரி இதை அப்படியே விட்டுவிடுவோம் என்று வெட்டுவதை அப்படியே நிறுத்தி விட்டான்.

மீண்டும் இரண்டாவதாக ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான். அந்த இடத்தில் மறுபடியும் முப்பது முழம் ஆழம் வரை வெட்டினான். அந்த இடத்திலும் தண்ணீர் ஊற்றுத் தோன்றவில்லை. அந்த இடத்தில் வெட்டுவதையும் நிறுத்தி விட்டான்.

இப்பொழுது வேறு இடத்தில் வெட்டிப்பார்க்கலாம் என்ற எண்ணம் கொண்டான். அதனால் மூன்றாவதாக இடத்தைத் தேர்ந்தெடுத்தான். மிகவும் பாடுபட்டு அந்த இடத்தில் ஐம்பது முழம் வரை வெட்டினான். அப்படியும் தண்ணீர் வரவில்லை. அவனுக்கு அலுத்துவிட்டது. கிணறு தோண்டும் எண்ணத்தையே விட்டுவிட்டான்.

ஒருநாள், அனுபவசாலியான ஒரு பெரியவரிடம் தன் முயற்சியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். மூன்று முறை கிணறு வெட்டியும் தண்ணீர் கிடைக்கவில்லையென்றும், பூமியில் தண்ணீரே அற்றுப் போய் விட்டதென்றும் அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

பெரியவர் அவனை நோக்கினார். ''தம்பி, நான் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குச் சரியாக பதில் சொல்" என்றார்."ஆகட்டும் பெரியவரே" என்றான். மூன்று இடத்திலும் நீ வெட்டிய மொத்த ஆழம் எவ்வளவு இருக்கும் என்று சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

"மொத்தம் நூறு முழம் இருக்கும் ஐயா!" என்று பதில் சொன்னான் அந்த மனிதன்

"இந்த நூறு முழத்தையும் ஒரே இடத்தில் தோண்டி யிருந்தால், எப்படியும் தண்ணீர் தோன்றியிருக்குமோ?" என்றார் அந்தப் பெரிய மனிதர். அந்த மனிதன் அசட்டு விழி விழித்தான்.

''தம்பி, நீ மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததில் எந்தத் தவறுமில்லை. ஆனால் ஒரே இடத்தில் கருத்தைச் செலுத்தி நீ சலிப்பில்லாமல் தோண்டியிருந்தாயானால், நூறுமுழம் ஆழம் ஆவதற்கு முன்னாலேயே கூட நீர் கிடைத்திருக்கும். எப்போதும் விடாநம்பிக்கையுடன் ஒருமுகப்பட்ட முயற்சி யிருந்தால் எடுத்த செயல் வெற்றி பெறும்" என்றார் அந்தப் பெரியவர்.

அவர் சொல்வதும் உண்மைதானே!

மறுபடியும் தன் நிலத்தில் ஒரே இடத்தில் எழுபது முழம் வெட்டி நீர் ஊற்று கிட்டியது குறித்து ஆச்சரியம் அடைந்தான் அந்த மனிதன்.

இன்றைய செய்திகள்

13.03.2024


*13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்; தமிழக அரசு அறிவிப்பு.

*தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்; வானிலை ஆய்வு மையம்.

*அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி 4 % அகவிலைப்படி உயர்வு: மு க ஸ்டாலின் அறிவிப்பு.

*தமிழ்நாட்டில் 168 ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் விற்பனை தொடக்கம்.

*பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வென்றார் இந்திய வீரர் 
ஜெய்ஸ்வால்.

*ஐபிஎல் 2024 தொடர்: பயிற்சியை தொடங்கினர் சி.எஸ்.கே கேப்டன் தோனி.

Today's Headlines

*13 IPS officers transferred;  Tamil Nadu Government Notification.

 * Heat will increase in Tamil Nadu for the next two days;  Meteorological Centre.

 *Increase in 4% gratuity for the benefit of government employees, teachers and pensioners: CM Stalin's announcement.

 *Sales of local products started at 168 railway stations in Tamil Nadu.

 *Indian player Jaiswal won the player of the month award for February
 
 * IPL 2024 series: CSK captain Dhoni started training.

 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive