19-042024 அன்று நாடாளுமன்ற தேர்தல்
நடைபெறுவதை முன்னிட்டு குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையமதிப்பீட்டு
முகாம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு புதன் ) அன்று விடுமுறை
அளிக்கப்படுகிறது.
முக்கிய செய்தி
நாளைய தினம் (17.04.2024) சேலம் திருவாரூர் மாவட்டங்களில் மதிப்பீட்டு பணியானது விடுமுறை என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம் மையங்கள் காட்பாடி மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டும் மையங்களும் நாளை17.04.24 புதன்கிழமை தேர்தல் ஆயத்த பணிகளை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
19-04-2024 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மையமதிப்பீட்டு முகாம் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு நாளை (17.04.2024- புதன் ) விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
நாமக்கல் மாவட்டம்
முக்கிய அறிவிப்பு
தேர்தல் பணியினை முன்னிட்டு நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய மையங்களில் நாளை நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ரத்து செய்யப்படுகிறது.
மீண்டும் 22- 4- 2024 திங்கள்கிழமை அன்று முகாம் செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.
அனைத்து வகை மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் & மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்களின் கனிவான உடனடி கவனத்திற்கு....
வரும் 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளதால் முன்னேற்பாட்டுப்பணிகளுக்காக நாளைய தினம் (17.04.2024) புதன்கிழமை மேல்நிலை பொதுத்தேர்வுக்கான மதிப்பீட்டுப்பணி நடைபெறாது .வழக்கம் போல் .22.04.2024 திங்கட்கிழமை அன்று மதிப்பீட்டுப் பணி நடைபெறும் என்பதை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் & முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..
முகாம் அலுவலர்,
K J E M மேனிலைப்பள்ளி மையம்,
பரமக்குடி .
19.04.2024 பாராளுமன்றத் தேர்தல் பணியின் காரணமாக நாளை 17.04.2024 இராமநாதபுரம் இன்பன் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மதிப்பீடு மையத்திற்கு விடுமுறை என்ற விவரத்தினை அனைத்து ஆசிரியர்களுக்கு தெரிவிக்க தலைமையாசிரியகளுக்கு தெரிவிக்கப்படுகிறது
நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள இரண்டு விடைத்தாள் மதிப்பீடு மையத்திற்கும் விடுமுறை நமது முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பு.
பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு நாளை 17.4.2024 பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில் 12 ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தி முடித்தவர்களுக்கு விடுமுறையும் , பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தி முடிக்காமல் உள்ள பாடங்களுக்கு 17.4.2024 காலை மட்டும் முகாம் நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் புதுக்கோட்டை.
அனைவருக்கும் வணக்கம். நாளை 17.04.2024 புதன்கிழமை மற்றும் 20.04.2024 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு விடுமுறை வழங்க முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முன்வந்துள்ளார்கள். அதே வேளையில் குறிப்பிட்ட தேதியில் முகாம் நிறைவடையவும் கேட்டுக் கொண்டுள்ளார். நாமும் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளோம். நம்முடைய TNPGTA அமைப்பின் மூலமாக மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது. நண்பர்கள் அனைவருக்கும் இச்செய்தியை பகிருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
TNPGTA
திருப்பத்தூர் மாவட்டம்.
72,எல்எப்சி மேல்நிலைப்பள்ளி, இராணிப்பேட்டை விடைத்தாள் திருத்தும் மையம் மற்றும் வேலூர் மாவட்டத்திலும் பாராளுமன்ற பொது தேர்தல் முன்னேற்பாடுகளை முன்னிட்டு நாளை விலக்களிக்கப்படுகிறது. மேலும் வரும் திங்கட்கிழமை 22.4.2024 முதல் தொடர்ந்து நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொண்டதை தொடர்ந்து இடைநிலை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் மையத்தில் தற்போது பணிப்புரியும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தல் பணிக்கு ஆயத்தமாவதற்கு நாளை 17.04.2024 விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து முகாம் அலுவலரிடம் (OD) பிறப்பணி பெற்று செல்லலாம் என்ற அறிவிப்பு மாவட்ட கல்வி அலுவலரின் வாயிலாக பெறப்பட்டுள்ளது என்பதை பட்டதாரி ஆசிரியர் அனைவருக்கும் தெரிவிக்கலாகிறது🤝🤝👏👏🤝🤝👏👏😀😀😀😀😀😀😀😀இங்கனம்
மாவட்ட தலைவர் TNHHSSGTA
இராணிப்பேட்டை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...