Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடற்கல்வி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தல் சார்ந்து - தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை



பெறுநர் :

மதிப்பு இயக்குநர் அவர்கள்

பள்ளிக்கல்வித்துறை

பேராசிரியர் அன்பழகன் வளாகம் , சென்னை

~~~~

மதிப்புமிகு ஐயா அவர்களுக்கு வணக்கம் !

உடற்கல்வி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்தல் சார்ந்து எமிஸ் மூலமாக பதிவேற்றம் செய்து கலந்தாய்வு நடத்த மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஐயா அவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை அறிந்தேன் அதில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 700 கீழ் உள்ள மாணவர்கள் இருப்பின் ஒரு உடற்கல்வி ஆசிரியரும் , உயர்நிலைப்பள்ளிகளில் 700க்கும் மேல் 1500 வரை பயிலும் மாணவர்கள் இருந்தால் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என்றும் இதே எண்ணிக்கையில் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயுக்குநர் ஒரு உடற்கல்வி ஆசிரியர் எனவும் மற்றும் 1500கும் அதிகமாக மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி இயக்குநர் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த அளவிலேயே பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக மாணவ மாணவிகளில் ஒழுக்கநெறி பெரிதும் பாதிப்பு அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 700 குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் எனும் நிலை ஏற்பட்டால் மாணவர்களை நல்வழி படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படும் ஏற்கனவே மாணவர்கள் பல தீய பழக்கத்திற்கு அடிமையாக இருக்கின்ற சூழ்நிலைகள் அதிக அளவில் அரசு பள்ளிகளில் இருக்கிறது இதுபோன்ற சூழலில் 700 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்பது மாணவர்களின் ஒழுக்கத்தை மேலும் பாதிக்கும் விளையாட்டிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் மேலும் மாணவ மாணவிகள் ஒன்றாக பயிலும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் பெருமளவில இருப்பதையும் கருத்தில. கொள்ளவேண்டும் அங்கு பிரச்சனைகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஐயா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், எனவே 350கும் குறைவாக மாணவர்கள் பயிலுகின்ற பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியரும் 350கு மேல் 700கும் குறைவாக பயிலும் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு இரண்டு உடற்கல்வி ஆசிரியர்களும் 700கு மேல் 1500 வரை மாணவர்கள் உள்ள உயர்நிலைப்பள்ளிகள் என்றால் மூன்று உடற்கல்வி ஆசிரியர்கள் மேல்நிலைப்பள்ளி என்றால் ஒரு உடற்கல்வி இயக்குநர் மற்றும் இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்தால் தான் இப்போது உள்ள சூழலில் மாணவர்களை நல்வழி படுத்தமுடியும், என்னத்தான் வகுப்பாசியர்கள் பாட வாரியான ஆசிரியர்கள் இருந்தாலும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தான் மாணவர்கள் கட்டுப்பட்டு ஒழுக்கநெறியை கடைப்பிடித்து ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள் மாணவர்கள் விளையாட்டிலும் பெருமளவில் நாட்டம் கொண்டு சாதிப்பார்கள்
எதன் அடிப்படையில் நான் இதை வலியுறுத்துகிறேன் என்றால் மாணவர்களை நல்வழி படுத்தவதில் தனி கவனம் செலுத்தி பணியாற்றி வருபவர்களில் நானும் ஒரு ஆசிரியர் அந்த அனுபவத்தில் தான் மதிப்புமிகு இயக்குநர் ஐயா அவர்களுக்கு தெரிவிக்கின்றேன், ஐயா அவர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை மாற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்கள ஆசிரியர்கள் நல கூட்ம்மைப்பு சார்பில் வைக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்கள் நலன்கருதி உடற்கல்வி ஆசிரியர்களின் பணிநிரவல் கலந்தாய்வை நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive