OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கை

 

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் வாக்குறுதியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்:

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :


ஒரு கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்.

இதைப்போல், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும். இதுவும் ஒரு மணி மகுடம் ஆகி விடும்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தல் வாக்குறுதி 181-ல் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொன்னதை,

நம்பி, 12 ஆயிரம் குடும்பங்கள் எதிர்பார்த்து விடியல் கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.

நான்காவது ஆண்டில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி செய்து கொண்டுள்ளார்.

திமுக தலைவராக தான் கொடுத்த இந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் நிறைவேற்ற ஆணையிட வேண்டும்.

அமைச்சரவை கூட்டி அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.

2012 ஆம் அரசுப் பள்ளிகளில் நியமித்த உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்வியல்திறன் பாட பகுதிநேர ஆசிரியர்கள், தற்போது வழங்கப்படுகிற ரூபாய் 12,500 சொற்ப சம்பளத்தோடு, 14 கல்வியாண்டுகளாக தற்காலிகப் பணியில்  தான் உள்ளனர்.

தற்காலிகமாக பணிபுரிவதை காலிப் பணியிடங்களாக்கி, அதில் நிரந்தரப் படுத்தவேண்டும்.

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் நிதியாண்டில் தொடக்கல்வி இயக்குநகரத்தின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் தற்காலிக 1581  பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை, நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து பள்ளிக்கல்வித்துறையில் அரசாணை 175 வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களைப் போலவே, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன்படி அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2011-2012 ஆம் நிதியாண்டில் அரசு நடுநிலை, உயர்நிலை  மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டு, தற்போது பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களை, நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைக்க வேண்டும்.


***********************
S. செந்தில்குமார்
செல் : 9487257203
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive