ஜோலார்பேட்டை அருகே வகுப்பறையில் பாடத்தை கவனிக்காத இரண்டாம் வகுப்பு மாணவியின் கன்னத்தில் ஆசிரியை அறிந்ததாக கூறப்படுகிறது அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அன்னாண்டிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 23 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியை ராஜலக்ஷ்மி என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அப்போது ஒரு மாணவி பாடத்தை கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இதைப் பார்த்து ஆசிரியை அந்த மாணவி கன்னத்தில் அறிநததாக கூறப்படுகிறது
இதை அறிந்த பெற்றோர் மறுநாள் பள்ளியை திறந்தவுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் தட்டி கேட்டுள்ளனர் அப்போது இரு தரப்புக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது .
கல்வி அலுவலர் அமுதாவிற்கு அறிக்கை சமர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர் நடவடிக்கையாக மாணவியை அடித்த ஆசிரியை ர். ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதா அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...