பாதுகாப்புத் துறையில் கொட்டிக்கிடக்கும் பணி வாய்ப்புகள்... என்ன படித்தால் என்ன வேலை...?
உலகின் மிகப்பெரிய ராணுவ அமைப்புகளில் ஒன்று இந்திய ராணுவம். பல நூற்றாண்டு கால பின்னணியும் வரலாறும் கொண்ட நமது ராணுவம் பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது உள்ள அமைப்பு போன்றுதான் பிரிட்டிஷ் காலத்து ராணுவ அமைப்பு இருந்தது என்றாலும், பெரும்பாலான உயர் பதவிகளை வெள்ளையர்கள்தான் ஆக்கிரமித்திருந்தனர். சுதந்திரத்திற்கு பின்னர்தான் இந்திய ராணுவத்தின் தந்தை' என்று போற்றப்படும் ஜெனரல் கே. எம். கரியப்பா முதல் இந்திய கமாண்டர் இன் சீஃப்-- commander- in- chief ( பின்னர் ஃபீல்ட் மார்ஷல்) ஆக நியமிக்கப்பட்டார்.
சுதந்திரத்திற்கு முன், முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களிலும், பின்னர் சீனா, பாகிஸ்தான் உடனான போர்களிலும் பங்கேற்ற நீண்ட வரலாற்று பெருமை கொண்ட நம் இந்திய ராணுவத்தின் தலைமையகம் டெல்லி செங்கோட்டையில் உள்ள சவுத் பிளாக்கில் இருக்கும் சேனா பவனில் அமைந்துள்ளது. இங்கிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மட்ட ராணுவ கட்டமைப்புகளை கட்டுப்படுத்துகிறது. பாதுகாப்புத் துறையில் பணி என்பது அரசு வேலை என்பதை தாண்டி, நாட்டுக்காக சேவை செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தியும் பெருமிதமும் கூடுதல் போனஸ். இது வேறு எந்த வேலையிலும் கிடைக்காத ஒன்று.
பொதுவாக ராணுவத்தில் வேலை என்றவுடன் பெரும்பாலானோருக்கு எல்லைக்கோட்டருகே துப்பாக்கியை பிடித்தபடி நின்றுகொண்டிருக்கும் ராணுவ வீரரின், அதாவது கள வீரரின் பணி மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் பாதுகாப்புத் துறையில் பணி என்றால் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படை என்று மூன்று துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
இதில் தரைப்படையான ராணுவத்தில் உள்ள வெவ்வேறு பிரிவுகள், அதில் உள்ள பணி வாய்ப்புகள் மற்றும் அவற்றில் சேருவதற்கான கல்வித் தகுதிகள் குறித்து பார்க்கலாம்....
பாதுகாப்பு படைகளின் இரண்டு முக்கிய பணிகள் என்னவென்றால் எதிரிகளுடன் சண்டையிடுவது மற்றும் வெள்ளம், விபத்து போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சேவை பணிகளில் உதவுவது. இதில் சண்டைப் பிரிவு ஆயுதப்படை, தளவாடம், சிக்னல், பொறியியல் மற்றும் காலாட்படை ( விமானப்படை மற்றும் கப்பற்படையிலும் இதே பிரிவுகள் உள்ளன) ஆகியவற்றைக்கொண்டது. சேவை பணிகளில் உதவும் பிரிவு என்பது எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங், ஆயுத பராமரிப்பு, மருத்துவம், உளவுத் துறை மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும். நம் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கமாண்டர் இன் சீப் எனப்படும் தலைமை ராணுவ தளபதி ( Chief of Army Staff - COAS) யின் கீழ் இயங்குகின்றன. கமாண்டர் இன் சீப்- பிற்கு உதவியாக துணை ராணுவ தலைமை தளபதி மற்றும் 7 PSO ( Principal Staff Officers ) எனப்படும் முதன்மை பணியாளஎர் அதிகாரிகள் , ராணுவ பணியாளர்களுக்கான இரண்டு துணை தலைவர்கள், Adjutant General, Quarter Master General, Master General of Ordnance, Military Secretary மற்றும் Engineer- in- Chief ஆகிய அதிகாரிகள் பணியாற்றுவார்கள்.
இதுதவிர இந்திய ராணுவம் ஐந்து பிராந்திய கமாண்ட் ( Command )
HQ Central Command, Lucknow ;
HQ Eastern Command, Calcutta ;
HQ Northern Command, Udhampur;
HQ Western Command, Chandimandir; and
HQ Southern Command, Pune.
என ஐந்து மண்டல கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர சிம்லாவில் ராணுவத்தின் பயிற்சி கொள்கைகளை வரையறுப்பதற்காகவே ராணுவ பயிற்சி கமாண்ட் கிளை ஒன்றும் செயல்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளை கொண்ட இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பணிகளில் சேருவதற்கான கல்வி மற்றும் இதர தகுதிகள் குறித்த விவரங்கள் இங்கே...
Indian Army GD ( General Duty)
இந்திய ராணுவத்தின் காலாட் படை எனும் பொதுப் பிரிவு பணிக்கான கல்வித்தகுதி மற்றும் உடற் தகுதி கீழ்க்கண்டவாறு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமானது. இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பொதுப்பிரிவுக்கான தேர்வில் கலந்துகொள்வதற்கும் இந்த குறைந்த பட்ச கல்வித்தகுதி கட்டாயம் தேவை.
வயது:
அசல் சான்றிதழின்படி 171/2 முதல் 23 க்குள் இருக்க வேண்டும்.
குடியுரிமை
1) இந்தியாவை சேர்ந்த அனைத்து பிரஜைகளும் சேரலாம். சில வெளிநாட்டை சேர்ந்தவர்கள் விதிமுறைப்படி சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இதர தகுதிகள்
மேற்கூறிய தகுதிகளுடைய அனைத்து ஆண்களும் விண்ணப்பிக்கலாம்.
உடல் அளவு மற்றும் தகுதி
உயரம்
167 செ.மீ உயரம் இருக்க வேண்டும். சில பிராந்தியங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இந்த அளவில் சலுகை காட்டப்படும். மார்பளவு விரிந்த நிலையில் 77 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். மார்பு விரிவடையும் திறன் குறைந்தபட்சம் 5 செ.மீட்டராவது இருக்க வேண்டும்.
உடல் எடை
50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
* தொற்று நோய், மாரடைப்பு, அறுவை சிகிச்சை போன்ற எந்த பாதிப்பும் இல்லாதவராக இருத்தல் வேண்டும். மூக்கு, காது மற்றும் தொண்டை ஆகியவை சரியாக செயல்பட வேண்டும்.
இவை தவிர ஓடுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட உடற் தகுதி திறனும், மருத்துவ பரிசோதனையும் செய்யப்படும்.
பாதுகாப்புத் துறையில் பட்டப்படிப்பும் வேலை வாய்ப்புகளும்
10 ம் வகுப்பு என்ற குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் ராணுவ பொதுப்பிரிவில் சேரும் வேலையை தவிர, நேரடியாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் அதிகாரிகளாக சேருவதற்கான பல்வேறு பட்டப்படிப்புகளும் புனே உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இந்திய ராணுவத்தால் நடத்தப்படும் இந்திய பாதுகாப்பு கல்லூரிகளில் ( Defence colleges ) உள்ளன.
பாடப்பிரிவுகளும் அதற்கான கல்வித்தகுதிகளும்
* B.A. Defence and Strategic Studies: இந்த பாடப்பிரிவிற்கான காலம் 3 ஆண்டுகள். அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து பெறப்பட்ட 10 + 2 ம் வகுப்பு தேர்ச்சி.
* B.Sc. Defence Studies: படிப்பு காலம் 3 ஆண்டுகள். குறைந்த பட்ச தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து பெறப்பட்ட 10 + 2 ம் வகுப்பு தேர்ச்சி.
* M.A. (Defence and Strategic Studies/Defence and National Security Studies): ஒரு சில Defence கல்லூரிகளில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலே சேர்த்துக்கொள்கிறார்கள்.
சில கல்லூரிகளில் மட்டுமே இளங்கலை பட்டமும் Defence and Strategic Studies பாடப்பிரிவை கொண்டதாக இருந்தால் மட்டுமே சேர்த்துக்கொள்கிறார்கள். * M.Sc. Defence studies: இதில் சேருவதற்கான தகுதி Defence and Strategic Studies ல் இளங்கலை பட்டம்
M.Phil. Defence and Strategic Studies: இதே படிப்பில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய முதுகலை பட்டம். இது தவிர எழுத்து தேர்வு, சில சமயங்களில் நேர்முக தேர்வுக்கு பின்னரே சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ஒரு சில கல்லூரிகள் மட்டுமே தொலைதூரக் கல்வி முறையிலும், பகுதி நேரமாகவும் இந்த படிப்பை வழங்குகின்றன.
Ph.D. in Defence Studies: பாதுகாப்பு துறை படிப்பில் முதுகலை பட்டம். எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
இளங்கலை பட்டப்படிப்பில் Defence Studies பயிலாத மாணவர்களையும், இதே துறையின் முதுகலை பட்டப்படிப்பிற்கு ஒரு சில கல்லூரிகள் மட்டுமே சேர்த்துக்கொள்கின்றன. இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் எவ்வித எழுத்து தேர்வோ அல்லது நேர்முகத்தேர்வோ இல்லாமல் முதுகலை பட்டப்படிப்பில் சேரலாம்.
இந்த முதுகலைப்பட்டப் படிப்பில் Military Science, Military Sociology, Military History, Defence Economics, Map Reading, Fire safety and management, security management, disaster management, security and counter intelligence உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இதே பாடப் பிரிவுகளின் கீழ் இளங்கலை பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
மேலும் கூடுதல் விவரங்களை http://joinindianarmy.nic.in/index.htm என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...