தகுதி தேர்வு எழுத விரும்பாத எந்த ஆசிரியர்களும் ராஜினாமா செய்துவிடலாம் என பீகார் மாநிலத்தின் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் பணியாற்றம் SGT/BT ஆசிரியர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததோடு, தகுதி தேர்வை ரத்துசெய்யக்கோரிய அனைத்து ஆசிரியர்களின் மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு,( MAY 2024) குழந்தைகளின் கல்விக்கு ஆதரவாக பேசியது.உச்ச நீதிமன்றத்தில் பீகார் மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு சம்பந்தமான மேல்முறையீட்டு வழக்கை இந்த இரண்டு நீதிபதிகளும் விசாரித்து வந்தனர் "இந்திய நாட்டின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியில் மட்டும் இன்றி, இந்த வழக்கை பொறுத்த வரை குறிப்பாக பீகார் மாநிலத்தில் குழந்தைகளின் கல்வியில் நாங்கள்(நீதிபதிகள்) ஆர்வமாக உள்ளோம். ஆனால் எந்த ஆசிரியரும் அரசின் விதியை பின்பற்ற விரும்பவில்லை என்றால், அவர்கள் ராஜினாமா செய்யட்டும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தனர். மாணவர்களுக்கு சேவை செய்ய விரும்புவோர் மட்டும் தகுதித் தேர்வை எழுதட்டும்" என்று காட்டமாக கூறியுள்ளது பீகார் மாநிலத்தின் மூத்த ஆசிரியர்களிடையே பெரிய கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கீழான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் சிலர் (SGT/BT), தங்கள் திறனை சோதிக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை ( TET) வலியுறுத்தும் பீகார் பள்ளி பிரத்யேக மத்திய/மாநில ஆசிரியர் விதிகள், 2023- & NCTE விதிகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத மறுப்பு தெரிவித்தனர். அவர்கள் சார்பில் பரிவர்தங்கரி பிரரம்பிக் ஷிக்ஷக் சங்( இது பீகார் மாநிலத்தின் ஒரு ஆசிரியர் சங்கத்தின் பெயர்)மற்றும் பீகார் ராஜ்ய பிரரம்பிக் ஷிக்ஷக் சங்(இது பீகார் மாநிலத்தின் மற்றொரு ஆசிரியர் சங்கத்தின் பெயர்) ஆகிய இரு சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் TET FOR PROMOTION AND APPOINTMENT ஐ எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார்கள். பீகார் அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஆசிரியர் தகுதி தேர்வு என்பது விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும்,இது குறைந்தபட்ச கல்வி தகுதி அல்ல கூடுதல் கல்வி தகுதி என்றும்,தேர்வில் பங்கேற்க விரும்பாதவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்ற வாதமும், TET வேண்டாம் என்ற இரண்டு சங்கங்களின் சார்பிலும் PRAYER முன்வைக்கப்பட்டது இருப்பினும், பீகார் மாநிலத்தின் மாநில உள்ளாட்சியில் பணியாற்றுகின்ற தகுதிபெறும் ஆசிரியர்கள்(TET APPOINTMENT), மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய பலன்களை பெறுவார்கள். எனவே தகுதித் தேர்வை எதிர்த்து,தகுதி தேர்வில் தேர்ச்சி பெற விரும்பாத/தேர்ச்சி பெறாத சங்கங்களின் சார்பாக மீண்டும் பீகார் மாநிலத்தின் மாநில உள்ளாட்சியில் பணியாற்றும்( NON TET SGT & BT) ஆசிரியர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். ஒட்டுமொத்தமாக தகுதித் தேர்வை எதிர்த்தும்,தேர்வினை எழுத முடியாது என்றும்,தாங்கள் ஏற்கனவே மாநில அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்டு விட்டோம் என்றும் கூறி மேலே குறிப்பிட்ட இரண்டு ஆசிரியர் சங்கங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடினார்கள். MAY 2024 ல் பீகார் மாநிலத்தின் ஆசிரியர் சங்கங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற அமர்வு, "தேசத்தை கட்டியெழுப்புபவர்கள் ஆசிரியர்கள். பீகார் போன்ற மாநிலத்தில், ஆசிரியர்களை மேம்படுத்த அரசு முயற்சி செய்கிறது. ஆனால் அதனை பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியர்களாகிய நீங்கள் அனுமதிக்கவில்லை. இவற்றை உங்களால் எதிர்கொள்ள முடியாது போனால் வெளியேறுங்கள்" என்று கடுமையான காட்டத்தை காட்டியது உச்ச நீதிமன்றம். மேலும் "ஆசிரியர் சேவை என்பது ஓர் உன்னதமான தொழில். ஆனால் கற்பித்தல் பணியை விட சம்பளம் மற்றும் பதவி உயர்வில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள். இங்கே ஆசிரியர் பணியை லட்சியமாகக் கொண்டு படித்து முழு தகுதியுடன் உள்ள பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் திறமைகளை மேம்படுத்த முன்வர மறுக்கிறீர்கள்.இது எவ்வகையிலும் நியாயம் இல்லை,ஏற்கத்தக்கதல்ல.இதனை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கின்றது. நமது கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் நம் நாட்டில் உள்ள கல்வியைப் பாருங்கள்.ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலத்தில் இலக்கண, இலக்கிய பிழையின்றி ஒரு பக்கம் கடிதம் கூட எழுத முடியாது தவிக்கிறார்.இது மிகவும் வேதனைக்குரிய செயல். இத்தகைய சூழ்நிலையில் ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்த அரசு எதையாவது செய்யும்போது, அதற்கு எதிராக நீதிமன்றம் மூலம் சவால் விடுவீர்கள். எல்லா மாணவர்களும் தனியார் அல்லது சர்வதேச பள்ளிகளுக்குச் செல்ல முடியாது. அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எதிர்காலத்தை பரிசீலித்து உரிய முடிவுகளின் படி இன்று TET FOR APPOINTMENT AND PROMOTION க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பீகார் மாநிலத்தின் ஆசிரியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» TET தேர்வு எழுதுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...