Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Guides - Public Exam Question Bank - Sales

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது - யார் யாருக்கு - முழு விளக்கம்

INCOME%20TAX%2012%20lakhs

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மக்களவையில் இன்று காலை 11.02 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தனது உரையில் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்: வருமான வரி சார்ந்த அறிவிப்புகள்:

புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

வருமான வரி தாக்கல் செய்யப்படுதல் எளிதாக்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரை வரி பிடித்தம் கிடையாது.

தனிநபர் வருமான வரி சீர்திருத்தங்கள் நடுத்தர வர்க்கத்தினர் நலனை சார்ந்ததாக இருக்கும்.

வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் (TDS) பிடித்தத்துக்கான வருடாந்திர வரம்பு ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.

*தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: புதிய வருமான வரி முறையின்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. பழைய வரி விதிப்பு வருமான வரி முறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:

  • ரூ.4 லட்சம் வரை - வரி இல்லை
  • ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை - 5% வரி
  • ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10% வரி
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை - 15% வரி
  • ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை - 20% வரி
  • ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை - 25% வரி
  • ரூ.24 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி

முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது.

அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive