பொறியியல் அல்லது டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 'யஷஸ்வி' எனும் உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தகுதிகள்:
* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
* ஏ.ஐ.சி.டி.இ.,யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சிவில் இன்ஜினியரிங், கெமிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிப்பில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
*'லேட்ரல் என்ட்ரி' முறையில் நேரடியாக இளநிலை பட்டப்படிப்பு அல்லது டிப்ளமா படிப்பின் இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெற்றவர்களும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
* குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விவரம்:
ஒவ்வொரு ஆண்டும் 5,200 மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதில் பட்டப்படிப்பு படிப்பவர்கள் 2,593 பேரும், டிப்ளமா படிப்பவர்கள் 2,607 பேரும் அடங்குவர். பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும், டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
உதவித்தொகை கால அளவு:
தேர்வு செய்யப்படும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கும், டிப்ளமா படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஏ.ஐ.சி.டி.இ.,யின் உதவித்தொகை போர்டல் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும், டிப்ளமா மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 15
விபரங்களுக்கு:
www.aicte-india.org
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...