எம்.டி., எம்.எஸ்., மூன்றாம் கட்ட கலந்தாய்வில் பதிவு கட்டணம் செலுத்தி, பங்கேற்கலாம் என, சென்டாக் அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் காலியாக உள்ள எம்.டி., எம்.எஸ்., இடங்களுக்கு இதுவரை இரண்டு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது.அடுத்து, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடத்த சென்டாக் தயாராகி வருகிறது. இந்த மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க வரும் 2ம் தேதி மாலை 5:00 மணிக்குள் பதிவு கட்டணம் செலுத்தி பெயர் பதிவு செய்ய வேண்டும்.
அத்துடன், அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிர்வாக இடங்கள், தெலுங்கு, கிறிஸ்துவ சிறுபான்மையினர் சீட்டுகளில் கோர்ஸ் முன்னுரிமையை தேர்வு செய்ய வேண்டும்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொது, ஓ.பி.சி., எம்.பி.சி., மீனவர், முஸ்லீம், பி.டி., பழங்குடியினர் 1 லட்சம் ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனுடைய பிரிவினருக்கு 25 ஆயிரம் ரூபாய் பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, கிறிஸ்துவ உள்ளிட்ட அனைத்து நிர்வாக இடங்களுக்கு 2 லட்சம் ரூபாய் பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் கட்ட கவுன்சிலிங்கில் சீட் ஒதுக்கப்படாவிட்டால் பதிவு கட்டணம் திருப்பி தரப்படும்.
ஒருவேளை சீட் ஒதுக்கப்பட்டால் இந்த பதிவு கட்டணம் தவிர்த்து, மற்ற தொகையை செலுத்தி கல்லுாரியில் சேரலாம். ஆனால் சீட் ஒதுக்கப்பட்டு இடம் கிடைத்த கல்லுாரியில் சேராவிட்டால் திருப்பி தரப்பட மாட்டாது.
மூன்றாம் கட்ட கலந்தாய்விலும் நிரப்பாத சிறுபான்மையினர் இடங்கள் அகில இந்திய நிர்வாக இடங்களுக்கு மாற்றப்பட்டு நிரப்பப்படும் என, சென்டாக் அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தினை பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...