இந்தியாவைச் சேர்ந்த நர்ஸ்கள் ஐரோப்பாவில் பணியாற்றும் வகையில், நர்சிங் ஐரோப்பாவுடன், வெராண்டா லேர்னிங் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இது குறித்து, வெராண்டா லேர்னிங் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:
ஐரோப்பிய நாடுகளில், சுகாதார துறையில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு தேவையான திறன்களுடன், இந்திய நர்ஸ்களை மேம்படுத்தும் வகையில், நர்சிங் ஐரோப்பாவுடன், வெராண்டா லேர்னிங் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் வாயிலாக, மூன்று ஆண்டுகளில் இந்தியாவை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட நர்ஸ்களுக்கு, ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். இதில், நர்சிங் தகுதி பெற்ற மற்றும் உரிமம் பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவதன் வாயிலாக, ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நார்வே, டென்மார்க், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...