தினமலர் நாளிதழ் மாணவர்கள் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில் நேற்று இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், வினாடி-வினா இறுதிப்போட்டி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நடந்தது.
இதில் பங்கேற்ற மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் வினாடி-வினா போட்டி தொடர்ந்து நடத்தப்பட்டது. தகுதியான மாணவர்களுக்கு இறுதிப்போட்டி தற்போது நடக்கிறது. இறுதிப்போட்டிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, 1000 மாணவர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது.
இதில், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பதில் சொல்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது. மாநகராட்சி சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் இல்லாமல், மாநகராட்சி மாணவர்களின் திறன்களை பிறர் பாராட்டுவதை கேட்கும் போது பெருமையாக உள்ளது.
தேர்வு நேரம் என்பதால், தொடர்ந்து அதற்காக தயாராகி வரும் மாணவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வு, ஊக்கம், உற்சாகம் அளிப்பதாக இருக்கின்றது. பட்டம் போன்ற நாளிதழ்களை தொடர்ந்து படித்தால் அறிவை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
மாணவர்கள் அரசியல், விளையாட்டு, கல்வி, உலகம் சார்ந்த அனைத்து பொது அறிவையும் தெரிந்துகொள்ளவேண்டும். நாளிதழ்கள், நுால்களை வாசிக்கும் பழகத்தை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பெரிய பதவிகளுக்கு செல்ல நாளிதழ் வாசிப்பு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...