பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, பிரதமர் மோடியுடன் உரையாடிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் பதிவிட்டுள்ளதாவது:
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியுடன் உரையாடிய வரலாற்று சிறப்பு மிக்க நாள் இன்று. இந்த தொடர்பு இந்தியாவின் 140 கோடி குடிமக்களுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்த ஐ.எஸ்.எஸ்., பயணம், இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும். விண்வெளியில் இந்தியா காலடி வைத்தது நமது திறனுக்கான சான்று.
இவ்வாறு நாராயணன் பதிவிட்டுள்ளார்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...