பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் . கல்வித்துறை சார்ந்த செயல்திட்டங்கள் . இல்லம் தேடிக்கல்வி , எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்கள் மாவட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கூர்ந்தாய்வு செய்து உறுதி செய்யவும் , கற்றல் கற்பித்தல் சார்ந்த பணிகள் மற்றும் மாணவர்களின் அடைவுத்திறன் போன்றவற்றை உறுதி செய்தல் பொருட்டும் , பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக ( Monitoring Officers ) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் , SLAS மற்றும் திறன் இயக்கம் சார்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளின் கற்றல் ( Focus Children ) மற்றும் அடைவுத்திறன் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் முடிக்கப்பட வேண்டுமென்பதால் , மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று மாணவர்களுடைய கற்றல் மற்றும் அடைவுத்திறனை மேம்படுத்துவதை ஆய்வுசெய்து ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . துறை இது தொடர்பான அறிக்கையினை இணை இயக்குநர்கள் சம்மந்தப்பட்ட இயக்குநர்களுக்கும் , இயக்குநர்கள் அரசுக்கும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...