பூமிக்கு கவசம் போல இருக்கும் இந்த ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்த போது அடர்த்தி குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 1987ம் ஆண்டு ஓசோன் படலம் குறித்த சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது.
ஐ.நா.சபையானது, செப்டம்பர் 16ஆம் தேதியை உலக ஓசோன் தினம் (அ) உலக ஓசோன் பாதுகாப்பு தினமாக அறிவித்தது.
ஓசோன் படலத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்க உலக நாடுகளுக்கு வலியுறுத்தப்பட்டது.
ஓசோனை பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்து நம்முடைய நடவடிக்கைகள் ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். 💐








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...