
Silence is sometimes the best answer.
சில நேரங்களில் அமைதியே மிகச் சிறந்த பதில் ஆகும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.
2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.
பொன்மொழி :
உண்மைக்காக எதையும் துறக்கலாம். எதற்காகவும் உண்மையைத் துறக்காதே! - சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
01. பரமபத விளையாட்டை கண்டறிந்தவர் யார்?
02.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
English words :
take away – remove, எடுத்து செல்லுதல்
Grammar Tips:
அறிவியல் களஞ்சியம் :
பல நன்னீர் உயிரினங்கள் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைப்பதால் நீர்மாசுபாட்டின் தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
செப்டம்பர் 22
நீதிக்கதை
மலைப்பாம்பும் மான் குட்டியும்
ஒரு நாள் மான்குட்டி ஒன்று தனது தாய்க்காக நாவல் பழங்களை பறிக்க ஆற்றை கடந்தது. அப்போது அங்கு குறட்டி என்ற பெயரைக்கொண்ட ஒரு மலைப்பாம்பு இருந்தது. அது இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும். அது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் கொண்டது. கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது மிக கடினம்.
மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.
ஆனால் குறட்டி வித்தியாசமாக காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில் நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது. குறட்டி ஆற்றங்கரையையே பார்த்துக்கொண்டு இருந்தது. ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டியைப் பார்த்தது. மான்குட்டி தனது பக்கமாக வரும்வரை காத்திருந்தது. மானும் ஆற்றைக் கடந்து குறட்டி இருக்கும் இடத்தை நோக்கி வந்தது. மானை குறட்டி சுற்றிக்கொண்டது. அம்மா என்று கதறியது மான்குட்டி. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது. பாவமாக இருந்தது.
மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது. குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் தப்பிக்க போராட்டம் நடத்தும். மான் குட்டியைப் பார்த்து, நீ ஏன் அழுகிறாய் என்றது குறட்டி. மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு எப்படியும் நான் சாகுவது உறுதி. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் எனக்கு உதவுங்கள் என்றது மான். நான் எப்படி உதவ முடியும்? என்றது.
மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு நான் வருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு என்றது மான். நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்று எனக்கு நம்பிக்கையில்லை. அப்படியேன்றால் நீ என் கூடவே வா... நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு.
உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன? என்றது குறட்டி. என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன். நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும் என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டு மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது. தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால் அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும் என்றது குறட்டி. நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன் என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடிய மான் குட்டி தனது அம்மாவுக்காக கொண்டு வந்த நாவல் பழத்தை உண்ணக் கொடுத்தது.
குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களில் மறைந்து கொண்டது. அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன. அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விடுமே என்று நினைத்தது. பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக்கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர்ந்தது.
அதே மான்குட்டி தனியாக வந்தது. என் கடமை முடிந்தது. எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன். உனக்கு எனது நன்றி என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி. குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். உன்னை கொன்று தின்னப்போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்? நீ சொன்னது சரிதான்... ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?
குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்குகிறேன் என்று சொல்லி, குறட்டி அதனை உயிரோடு விட்டுச்சென்றது.
நீதி :
எப்போது மற்றவருக்கு உதவும் குணம் இருத்தல் வேண்டும்.
இன்றைய செய்திகள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...