90 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் POCSO Act குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி
2025-26 பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ‘தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்படும்’ என அறிவித்தோம்.
அதனை செயல்படுத்தும் விதமாக இன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர் @r_sakkarapani அவர்களுடன் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தோம். ரூ.4.94 இலட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 90 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை இல்லா சூழலை உருவாக்குவோம். மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது நமது கடமையாகும்!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...