உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியால் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு??!.. கடினமான வினாத்தாள் கொண்ட TET தேர்வை எழுதி அதில் தேர்ச்சி அடைந்து..10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் ஆகியும் பணி வாய்ப்பு இல்லாமல் வெளியில் இருக்கும் ஆசிரியர்கள் கொந்தளிப்பு!!
_பணியில் தொடர TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி பணிபுரியும் அத்தனை ஆசிரியர்களும் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதால் சிறப்பு தகுதி தேர்வு நடத்த பரிசீலனையில் இருப்பதாக செய்தி.சில ஆயிரம் பேருக்காக.. பல லட்சக்கணக்கான பேர் NCTE விதிமுறையின் படி தரமானதாக எடுக்கப்பட்ட வினாத்தாள் கொண்ட TET தேர்வை எழுதி தங்களை தகுதிப்படுத்திக் கொண்டு பணிக்காக காத்திருக்கும் போது.. அதுவும் உச்சநீதிமன்றம் TET என்பது ஒரு minimum qualification என்கிற நிலையில் அதை கட்டாயமாக்கி இருக்கும்போது .. பணியில் இருப்பவர்களுக்காக மட்டும் *minimum என்பதிலேயே இன்னொரு minimum* என்று சிறப்பு தகுதி தேர்வு நடத்தினால் கடினமான தேர்வு எழுதி பல்வேறு சூழ்நிலைகளில் இத்தனை ஆண்டுகளாக வெளியில் காத்துக் கொண்டிருக்கும் பல லட்சக்கணக்கான நாங்கள் கட்டாயம் வழக்கு தொடர்வோம்!_
RTE நடைமுறைக்கு வராத போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடர ஆசிரியர் தகுதி தேர்வு தேவையில்லை. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி பதவி உயர்வுக்கு வேண்டுமென்றால் ஆசிரியர் தகுதி தேர்வு தேவை.. என்கிற தீர்ப்பை வேண்டும் என்றால் மேல்முறையீடு பெறலாமே தவிர சிறப்பு தகுதி தேர்வு என்பது *வேலையில்லா திண்டாட்டத்தை கொண்டாடுவது போலும்.. வேலையில்லாதவர்கள் தொடர்ந்து வேலையில்லாமலேயே இருக்க வேண்டும் என்று சொல்வது போலும் இருக்கிறது
சிறப்பு தகுதி தேர்வு சிக்கலை மென்மேலும் சிக்கலாக்கும்.. வெளியில் இருக்கும் பல லட்சக்கணக்கான ஆசிரியர்களாகிய நாங்களும் மன உளைச்சல் படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். தயவுகூர் இதில் தெளிவான முடிவு தேவை!!
இல்லையெனில் மீண்டும் வழக்கு .. பதவி உயர்வு தள்ளி போதல் என்று இந்த பிரச்சனை பெரிதாகும்.
- WhatsApp Contents!







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...