Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 02.12.2025
A leopard cannot change it's spots.
ஒருவன் தனது இயல்பை மாற்ற முடியாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.
2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.
பொன்மொழி :
எப்படி மக்களுக்கு சேவை செய்வது என்று தெரிந்தவனுக்குத்தான் எப்படி ஆட்சி செய்வது என்பது தெரியும் - சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
01.வரலாற்று புகழ்பெற்ற பாடலிபுத்திரம் நகரின் தற்போதைய பெயர் என்ன?
02. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களின் ஆபரணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
English words :
1.பரிதாபம் - Remorse or regret
2.பொறுமை - Modesty or humility
3.மகிமை - Greatness or magnificence
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
குழந்தை உருவாவது முதல், நுரையீரலின் சுவாசக் குழாய் மூடியபடி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். ஏனெனில் அங்கே வெற்றிடம் தான் இருக்கும். இதனால் காற்றழுத்தத் தாழ்வு உண்டாகி மூடிக்கொள்ளும். எப்படியெனில், நீங்கள் ஒரு உறிஞ்சு குழாயை (குளிர்பான ஸ்ட்ரா) எடுத்து, ஒரு முனையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு மறுமுனையில் வாய் வைத்து உள்ளிருக்கும் காற்றை உறிஞ்சினால், குழாயின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு தட்டையாகிவிடும். இப்படித்தான் சுவாசக் குழாய்களும் அழுத்தக் குறைவினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது சுமார் பல மாதங்கள் அப்படியே இருக்கும்
டிசம்பர் 02
நீதிக்கதை
பூவா தலையா
ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்.
இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,
அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார்.
வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.
அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.
யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
இன்றைய செய்திகள்
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.12.2025
![]() |
| December 1 - World AIDS Day |
Rough seas make brave sailors.
அலைகள் நிறைந்த கடல் தான் தைரியமான மாலுமிகளை உருவாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.
2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.
பொன்மொழி :
ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதை காட்டிலும் ஒரு நல்ல மனிதனால் ஆளப் பெறுதல் மேலானது - அரிஸ்டார்ட்டில்
பொது அறிவு :
01.மசாலா பொருட்களின் ராஜா என்று எதை கூறுவார்கள்?
02. உலகின் மிக நீண்ட மண்டபம் கொண்ட கோவில் எது?
English words :
vigorous –strong, healthy, and full of energy. அதிக சக்தி மற்றும் ஆற்றல் நிறைந்த
தமிழ் இலக்கணம்:
அறிவியல் களஞ்சியம் :
இதய சுவர்கள் விரிவடையும் போது, இதய அறைகளில் வெற்றிடம் உருவாகிறது. அதனால் தாழ்வழுத்த மண்டலம் உருவாகி, அதனை நிரப்ப, உடலெங்கும் குருதி இழுக்கப்படுகிறது. இதனால் அறைகளில் உயர் அழுத்தம் உருவாகி, மீண்டும் வெளி அனுப்பப்படுகிறது. இப்படித்தான் இதயம் குருதி சுற்றோட்டத்தினை தொடர்ந்து அனிச்சையாகச் செய்கிறது. இந்த மாறுதலுக்கு அழுத்தமும், இதயச் சுவர்களில் ஏற்படும் மின் தூண்டலும் தான் காரணம்.
டிசம்பர் 01
நீதிக்கதை
தேவதைக் காட்டிய வழி
ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.
அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்.
அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள். அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.
நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.
முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.
அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான். கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.
ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.
மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.
பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.
இன்றைய செய்திகள்


















%20(1).png)
.png)
.png)
