Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வுகள் எதுவுமின்றி இந்திய அஞ்சல் துறையில் 28,740 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

dinamani%2Fimport%2F2023%2F2%2F11%2Foriginal%2Findian_post 
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 28,740 பணியிடங்களை தேர்வுகள் எதுவுமின்றி நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் எதுவுமின்றி தேர்வு செய்யப்படும் மத்திய அரசு வேலைக்கான சிறந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்தி பலன் பெறலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மொத்த காலிப் பணியிடங்கள் : 28,740

பணி: BRANCH POSTMASTER (BPM)

சம்பளம்: மாதம் ரூ. 12,000 - ரூ.29,380

பணி: ASSISTANT BRANCH POSTMASTER (ABPM)

பணி: DAK SEVAK

சம்பளம்: மாதம் ரூ. 10,000 - ரூ.24,470

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியிடன் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக, கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapost.gov.in அல்லது https://indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.2.2026





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive