Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு: முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவு வெளியீடு

hindutamil-prod%2F2026-02-26%2Fam4vev41%2F125454212 
அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முதல்கட்டமாக 5 பாடங்களுக்கான முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
 

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2025-ம் ஆண்டு டிச.27-ம்தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. அத்தேர்வை 42 ஆயிரத்து 64 பேர் எழுதினர்

மொத்தம் 48 பாடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் தற்போது முதல்கட்டமாக வரலாற்றுக் கல்வி, மனித உரிமைகள், இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, கடல்வாழ் உயிரியல், வனஉயிரியல் ஆகிய 5 பாடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (https://trb.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு காலியிடத்துக்கு 3 பேர்’ என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 23-ம் தேதியும்,நேர்முகத்தேர்வு 24-ம் தேதியும் நடைபெறும். இதற்கான அழைப்புக்கடிதம் இணையதளத்தில் வெளியிடப்படும்.

மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive