Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

hindutamil-prod%2F2026-02-22%2F6sm8rqnj%2Fexams-students-1761794920285 
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படவுள்ளது.
 

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பொதுத் தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியர்) மார்ச் 2 முதல் 27ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

இத்தேர்வுகளை எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (பிப்.23) மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று தங்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால் டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்களும் அவரவர் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive