Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு:தனியார் பள்ளிகளில் நாளை முதல் விண்ணப்பம்


                 இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், மாணவர் சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்கான அறிவிப்பை, தனியார் பள்ளிகள் இன்று வெளியிடுகின்றன. நாளை முதல், 9ம் தேதி வரை
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 
 

புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்குவதற்கு தமிழக அரசு தடை


               தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில், வரும் கல்வி ஆண்டில், புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்க அனுமதி கிடையாது என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு அறிவித்துள்ளது.
 
 

பயிற்சிகளுக்காக வசூலிக்கும் கட்டணத்தை கல்விக் கட்டணமாகக் கருத இயலாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


              விளையாட்டு போன்ற பாடத் திட்டத்தோடு தொடர்பில்லாத செயல்பாடுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை கல்விக் கட்டணமாக கருத இயலாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
 

போட்டியை சமாளிக்க தமிழக அரசு அதிரடி : ஆங்கில வழி கல்வியை அதிகரிக்க முடிவு


                 தனியார் பள்ளிகளால் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளித்து, அதிகமான மாணவ, மாணவியரை ஈர்க்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக அரசுப் பள்ளிகளில், ஆங்கிலவழி கல்வியை துவக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில், சட்டசபையில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

10+2+3 என்ற முறை சார்ந்த கல்விக்குத் தான், வேலைவாய்ப்பும், பதவி உயர்வும் அளிக்க முடியும் - உயர்கல்வித் துறை அமைச்சர்


                திறந்த நிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு அளிக்க, கோர்ட் தடை விதித்துள்ளது,'' என, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் முனுசாமி கூறினார். 
 

பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்


           ஆசிரியர் தகுதித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் எளிதாக ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., எம்.எட். பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.
   

எழுத்தாளர்களுக்கு கட்டுரைப் போட்டி மதுரை ஏக்தா நிறுவனம் அறிவிப்


           சரோஜினி நாயுடு நினைவு பரிசை பெற பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரை வெளிவந்த படைப்பாளிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர்கள் கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அறிவுரை


                நெல்லை கேடிசி நகரில் குடியிருக்கும் ஆசிரியர் வையணன் ராமதநாதபுரம் மாவட்டம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக (உயிரியல்) கடந்த 17,7,12 முதல் பணியாற்றி வருகிறார். 
 

அன்று தையல் ஆசிரியை: இன்று மண் சுமக்கிறார் "வயிற்றை கழுவ" கவுரவம் பார்க்காத எலிசபெத்


        குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலை பள்ளியில், தையல் ஆசிரியையாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறார். திண்டுக்கல், சாமிமுத்தன்பட்டியை சேர்ந்தவர், எலிசபெத், 60; திருமணமாகதவர். 
 

அரசு அலுவலகங்களில் ஒப்புகைச் சீட்டு (ACKNOWLEDGE -MENT) பெறும் வழிமுறைகள்


                 ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் நாம் கடிதம், புகார் கடிதம், போன்ற எந்த வகையான கடிதங்கள் அனுப்பினாலும் அரசு அலுவலர்கள் அக்கடிதங்களை கையாலும் வழிமுறைகளை பார்ப்போம். 
 

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மோசமாக இருப்பதால், பாக்கெட் உணவுகளை வழங்க அரசுக்கு பரிந்துரை


          பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை, மாநிலங்களவை உறுப்பினர் ஆஸ்கர் பெர்னான்டஸ் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. 
 

அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு


             அரசுக் கல்லூரிகளில் பயின்ற செவிலியர்களை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த இயலும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 

குரூப்-1 தேர்வு வயது வரம்பு உயருமா?


          "குரூப்-1 தேர்வை எழுதுவதற்கான, வயது வரம்பை, 35ல் இருந்து, 45ஆக அதிகரிப்பது குறித்து, முதல்வர் பரிசீலனை செய்து, முடிவை அறிவிப்பார்,'' என, அமைச்சர் முனுசாமி கூறினார். 
 

பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு


           அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத மெட்ரிக் பள்ளிகள் குறித்த விபரங்களை பள்ளிகல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
 

DTEd 2nd Year Exam starts from June 24th.


           2–ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுகள் ஜூன் 24–ந்தேதி தொடங்குகிறது 

 

பள்ளி திறந்த முதல் வாரத்திலேயே புத்தக பை, காலணி வழங்க உத்தரவு


               பள்ளிகள் திறந்த முதல் வாரத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் காலணி வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகளில் இலவச புத்தகங்கள், சீருடை, சைக்கிள், புத்தக பை, காலணி போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 
 

ஓராண்டு பட்டப்படிப்பு வழக்கு விசாரணை ஜூன்10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது- இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே-வில் நடைபெறுமா? - ஆசிரியர்கள் எதிர்பார்பு


                இரட்டை பட்டப்படிப்பு குறித்த வழக்கு மீண்டும் இடைக்கால தீர்ப்பை இரத்து செய்ய கோரி மனு செய்யப்பட்டு, வரிசை எண்.26-வது இடத்தில் நீதியரசர்கள் K.N.பாஷா மற்றும் S.நாகமுத்து ஆகயோரின் முன்னிலையில் இன்று (30.04.2013) "சிறப்பு வழக்கு" (SPECIALLY ORDERED CASE) ஆக விசாரணை நடைப்பெற்றது.

ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?


              நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?''
 
பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை:

கேட்-2013 தேர்வு தேதி அறிவிப்பு


             இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை அறிவித்துள்ளன.


பெண்ணுக்கு 57 வயதில் கிடைத்தது அரசுப் பணி


                ஓய்வு பெறும் வயதை எட்ட, இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பெண்ணுக்கு, அரசுப் பணி கிடைத்துள்ளது. அவர், சென்னை மாநகராட்சியில், டைபிஸ்ட் பணியில் நேற்று சேர்ந்தார்.சென்னை மாநகராட்சியில், 3,189 பணியிடங்களை நிரப்ப, அரசு அனுமதித்தது. 
 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது


               தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

51 ஆயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை


                 பள்ளி படிப்பை, இடையில் நிறுத்திய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே செல்லாமல் உள்ள குழந்தைகள், 51 ஆயிரம் பேர் இருப்பது, கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இவர்களை, வரும் கல்வி ஆண்டில், பள்ளியில் சேர்க்க கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
 
 

குடிநீர், கழிப்பறை வசதி செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து


               குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியை, முறையாக செய்யாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, உத்தரவிட்டுள்ளது.
 
 

இயற்பியல் கல்வி நிறுவனம் - ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனம்


              ஒடிசா தலைநகர் புபனேஷ்வரிலுள்ள இயற்பியல் கல்வி நிறுவனம், ஒரு சுயாட்சி ஆராய்ச்சி நிறுவனமாகும். அணு ஆற்றல் துறை மற்றும் ஒடிசா மாநில அரசு ஆகிய இரண்டும் இணைந்து இதற்கு நிதியளிக்கின்றன. இக்கல்வி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1972ம் ஆண்டு நிறுவப்பட்டது.
 
 

நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெற அறிவுறுத்தல்


          புதிதாக துவங்கப்படும் மற்றும் புதுப்பிக்க தவறிய நர்சரி பள்ளிகள், மே 30க்குள் அங்கீகாரம் பெறுமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று (29.04.2013) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு. - இடைக்கால தடை இறுதி தீர்பு வரை தொடர்கிறது


                    இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பால் பாதிக்கப்படும் 3 வருட பட்டப்படிப்பை  படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். 

மத்திய அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு


     மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசு ஊழியர்களும்,எதிர்பார்ப்பில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டு தோறும் இரு முறை அகவிலைப்படி உயர்வு (டி.ஏ.,) வழங்கப்படும்
              

மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்


* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.
 

"இரட்டை பட்டம்" இடைக்கால தடை எதிர்த்து மேல்முறையீடு, உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


             "இரட்டைப் பட்டம் செல்லாது" என்று விதிக்கப்பட்ட தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதிமன்ற பென்ச் அண்மையில் இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 3 வருடம் படித்த ஆசிரியர்கள் ஒரு மேல்முறையீடு மனு செய்துள்ளனர். அந்த மனுவானது நீதியரசர்கள் எலிப் தர்மா ராவ் மற்றும் எம். வேணுகோபால் ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உலகின் கோடீஸ்வர பேராசிரியர்களில் ஒருவர்


                  உலகின் உயரிய விருதாக கருதப்படும், "நோபல்" பரிசுடன் வழங்கப்படும் தொகையை விட, மூன்று மடங்கு அதிக தொகை கொண்டது, "ரஷ்ய நோபல்" பரிசு. இந்த ஆண்டில் தான், இவ்விருது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.


பள்ளி நிலங்களுக்கு பட்டா பெற முயற்சி: நிதி திரும்புவதை தடுக்க திட்டம்


              அரசு பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்களுக்கு, பட்டா வாங்கும் முயற்சியில், மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டா இல்லாததால், இதுவரை திருப்பி அனுப்பப்பட்ட நிதியை, இதன் மூலம் தக்க வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்


              மாணவர்களிடம் சட்ட விரோதமாக கட்டண கொள்ளையடிக்கும் கல்லூரிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "மூட்டா" பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


பயின்றதை பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே இலக்கை அடைய முடியும்


              இந்தியாவின் கல்வி முறை ஒரு தனி நபரின் ஆளுமைத் தன்மையை மேம்படுத்துவதற்கென்று எந்தவித பிரத்யேக முயற்சியையும் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்படவில்லை. எனவே, மென்திறன்கள் குறித்த விழிப்புணர்வை பெறுவதுதான் நிறுவனத்தில் அடுத்த நிலைகளை எட்டுவதற்கு உதவும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும்.

கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி; நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு


               "கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதி, நாட்டின் வளர்ச்சிக்கான முதலீடு ஆகும்," என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர், பல்லம் ராஜூ பேசினார்.

அந்நிய முதலீட்டால் இந்திய கலாச்சாரம், பண்பாடு, தொழிலுக்கு ஏற்ற கல்வி அமையாது


                  காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லூரியில், உயர் கல்வியில் அந்நிய முதலீடு, உள்நாட்டு தனியார் முதலீடு, அரசு கல்லூரிகளின் இன்றைய நிலைப்பாடு குறித்த மாநில கருத்தரங்கம் நடந்தது.

தாகத்தில் தவிக்கும் பறவைகள்; தண்ணீர் கொடுத்து உதவுங்கள்


              "சுட்டெரிக்கும் வெயிலால் தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு, தண்ணீர் கொடுத்து உதவுங்கள்," என, இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவர்களிடம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சர் வைகைச் செல்வன்


             அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., மேல்நிலைப்பள்ளியில், உலக புத்தக தின விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை வகித்தார். குணசேரன், ஆர்.டி.ஓ., மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பகவதி முன்னிலை வகித்தனர்.

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்


              மாநகராட்சி தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும் கல்வியாண்டு முதல், இலவசமாகப் பேருந்து பயண அட்டை வழங்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.


மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பயிற்சி


              மதுரை விவசாயக் கல்லூரி வளாகத்தில் உள்ள மனையியல் கல்லூரியில், 7 - 12 வயதுள்ள மாணவர்களுக்கு, சத்தான, ஆரோக்கிய உணவுகள் குறித்த பயிற்சி, மே 6,7ல் நடத்தப்படுகிறது.


ஆங்கில உச்சரிப்பு போட்டி: இந்திய மாணவருக்கு பரிசு


              சிங்கப்பூரில் நடந்த ஆங்கில உச்சரிப்பு போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர், "சாம்பியன்ஷிப்" பட்டத்தை வென்றுள்ளார்.


ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி என்ன? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு


                "பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை கூறுவது தான், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் பணி. பல்கலைகளால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பாடங்களுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு, தொழில்நுட்பக் கவுன்சிலின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை" என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


"அறிவை வளர்க்க நூலகங்களை பயன்படுத்த வேண்டும்"


             "உலக அறிவை வளர்த்துக் கொள்ள, பொதுமக்கள் அனைவரும், நூலகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,' என, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.


GO issued.


           பள்ளிக்கல்வி - த.ப.க.சா.நி.பணி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் - உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.

குஜராத்தில் கல்விப் புரட்சி


           கல்வி கற்றவர்களின் எண்ணிக்கைதான் ஒரு நாட்டு வளர்ச்சியின் அளவுகோல். கடந்த பத்து ஆண்டுகளில் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்விவரை குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே இதற்குச் சான்று.  
 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துங்கள்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்


               அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

சுற்றுச்சூழல் பொறியியல்: எம்.இ., பட்டத்திற்கு இணையாக எம்.டெக்.,


                   அரசு வேலைவாய்ப்புகளில், எம்.டெக்., - சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான பட்டம், எம்.இ., - சுற்றுச்சூழல் பொறியியல் பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

TET - Marks Relaxation by Community wise soon?

 

                வகுப்பு வாரி அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண், ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய நடைமுறை : தமிழக அரசு பரிசீலனை


                ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறத் தேவையான மதிப்பெண்களை வகுப்புவாரி அடிப்படையில் நிர்ணயிப்பது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசீலித்து வருவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Social Science BT's Request


          சமூக அறிவியல் பாடத்திற்கும் வாரத்திற்கு 7 பாடவேளைகள் வீதம் ஒதுக்கிதந்து சம அந்தஸ்து வழங்க கோரி  தருமபுரி மாவட்ட சமூக அறிவியல் பட்டதாரி உதவி ஆசிரியர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



New Admission Works starts on 29.05.2013 in High & Higher Secondary Schools.


               அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளிக்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் நர்சரி பள்ளிகளில் பயிலும் மாணவர்களை 29.05.2013 அன்றே பள்ளியில் சேர்க்க விண்ணப்பம் அளித்து மறுநாள் 30.05.2013 அன்று பெற்றோர் அனுமதியுடன் அம்மாணவர்களை அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


1,400 புதிய பணியிடங்கள் ஒளிவுமறைவற்ற கவுன்சலிங் : பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


                    2013-14ஆம் கல்வியாண்டில் சுமார் 1,400 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் புதிதாக உருவாகும் நிலையில் ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடத்தி சொந்த மாவட்டத்தில் பணிபுரிய தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வெளி மாவட்டங்களில் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்விப்பணிகள் இம்மாத இறுதியுடன் நிறைவு பெறுகின்றன.
 
 

அரசு பணியாளர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை


               அரசு துறைகளில் பணியாற்றுபவர்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்து, அரசியல் கட்சிகளில் சேர்ந்து உடனே தேர்தலில் போட்டியிட விரைவில் தடை வருகிறது. இதற்காக மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு பணியாளர் சங்க தலைவர் கோரிக்கை


               புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,'' என, அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
 
 

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்



              ஒரே கோரிக்கையை வலியுறுத்தி, மே 4 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் SSTA சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மதுரையில்.... 

 

இன்டெர்நெட் ஃபில் அதிகமாகாமல் அளவோடு பயன்படுத்த .....


               இன்டெர்நெட் பில் அதிகம் ஆகிறதா ? சிலர் பிராட் பேன்ட் டேட்டா கார்ட் , செல் போன் பயன்படுத்துவார்கள் அதில் 2 ஜி‌பி ,1 ஜி‌பி .500 எம்‌பி போட்டு பயன்படுத்துவார்கள் அது எப்போது முடியும் ? மீதம் எவ்வளவு உள்ளது ? என்று தெரியாமல் பயந்து... பயந்து ....பயன்படுத்துவார்கள் இனி அந்த பயம் வேண்டாம் 

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்


               பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 43 மழலையர் பள்ளிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
 
 

மூளையின் வலிமைக்கு வெள்ளரிக்காய்


              வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.

10th & 12th Result Date Announced.

Latest 2019 - Result Date News:




Below Message is 2013 - Old Year News:
+2 Result - May 9 = Time: 10.00 a.m

10th Result - May 31 = Time: 9.15 a.m

Tamil Nadu Govt Announced


மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


              பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


சத்துணவு மானியத்தை உயர்த்தியது தமிழக அரசு


               சத்துணவுக்கான மானியத்தை, தமிழக அரசு 69.50 பைசாவிலிருந்து ரூ.1.30 உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, 54 ஆயிரம் மையங்களில் சத்துணவு வழங்கப்படுகிறது.


பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு


               பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.


மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு


              எம்.எஸ்.சி., நர்சிங், எம்.பி.டி., ஆகிய, பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பார்மசி மாணவர்கள் பாரம்பரிய மருத்துவமும் கற்க அறிவுரை


                "பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக்கொள்ள பார்மசி மாணவர்கள் முன்வர வேண்டும்" என, கல்லூரி விழாவில் அறிவுறுத்தப்பட்டது.


கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு


                கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் செயல்பாட்டிற்கு, 69.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், பிரமலை கள்ளர் வகுப்பினர் அதிகளவில் வசிக்கின்றனர்.


547 பணி நிரவல் பணியிடங்கள் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஆசிரியர் கூட்டணி கவலை


                   நெல்லை மாவட்டத்தி ல் 547 பணி நிரவல் பணியிடங்கள் உள்ளதால் பல்வேறு தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட அனைத்து வட்டார, பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லையில் நடந்தது.
 
 

அரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த, புது திட்டம்!


              அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
 
 

செய்தித்தாள் வாசித்தால் சிந்தனை திறன் பெருகும்


           "செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் தினமும் படித்து வந்தால் சிந்தனை திறன் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிப்பால் செயல்திறன் கூடும்," என்று உதவி தொடக்க கல்வி அலுவலர் ரங்கராஜ் கூறினார்.
 
 

கல்லூரி விடுதி மாணவர்களுக்கு உதவித் தொகை உயர்வு


              கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கான உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கி கல்வி கற்கும் ஆர்வத்தை அதிகரிக்க மொபைல் கவுன்சிலிங் வழங்க 10 வேன்கள் வாங்கப்பட்டுள்ளது.


               தற்போதைய கல்வி கற்கும் சூழல் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமாக கல்வி கற்க வழிவகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

Just For Fun


அட்டகப்பல் - நம்மாளுக லேசு பட்டவங்க இல்லை


CEO's Meeting



         பள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் 25.04.2013ல் தொடங்கி 30.04.2013 வரை நடைபெறுகிறது

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive