Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

      வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை

     குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றிய பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

      திருப்புவனம், மானாமதுரை உள்பட 5 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 27) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

எஸ்.எஸ்.ஏ., திட்டம் ஏமாறும் மாணவர்கள்

           மத்திய அரசின் அனைவருக்கும்கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கைகழுவும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கு முன், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதலில் பயிற்சி தரப்பட்டது.ஆனால், இந்த பயிற்சியில், அரசு உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:


நேரடி பணி நியமனத்தில் குளறுபடி

             அரசுத்துறைகளில் நேரடி பணி நியமனத்தில் குளறுபடிகள் நடப்பதாக வேலைவாய்ப்புத்துறை ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளனர்.


இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணிடங்களை மறைப்பதாகக் கூறி ஆசிரியர்கள் தர்னா

         சிவகங்கை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களை மறைப்பதாக கூறி திங்கள்கிழமை ஆசிரியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு அக்., 26, 27 இல் நடைபெறுகிறது.


இ .பி.எஃப். ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

       ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழை (life certificate) கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டசெய்திக்குறிப்பு:


பி.எப். தொடர்பான குறைகளை தீர்க்க நவ.11-ம் தேதி சிறப்பு முகாம்

          தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தீர்க்க வரும் நவம்பர் 11-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு

           மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்கநிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது:


பத்தாம் வகுப்பு தேர்வு முறையை ஏன் மாற்ற வேண்டும்?

         அண்மையில் நடைபெற்ற காலாண்டுப் பொதுத்தேர்வில் 80%-க்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளி ஆசிரியர்களை மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்பதை வலியுறுத்தினார். அரசின் இந்த இலக்கை அடையவேண்டுமெனில் அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்வது அவசியம்.

பள்ளிகளில் பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

         வட கிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதையடுத்து, பள்ளிகளில் உள்ள பழுதடைந்த சுவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 

அரசு மருத்துவமனைகளில் 547 மருத்துவர்கள் பணி: ஆன்லைனில்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

     தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 547 இடங்களுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் (MRB) மூலம் நிரப்பப்பட உள்ளன.

நாடு முழுவதும் டிச. 1, 2 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

          பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்கள் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகஅறிவித்துள்ளன.இது தொடர்பாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


நேரடி நேர்முக தேர்வு அரசு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு

          தமிழக அரசு மருத்துவமனை களில் பணிபுரிய தற்காலிக அடிப்படையில் 547 அரசு உதவி டாக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எழுத்துத் தேர்வு இல்லாமல் நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக அரசு உதவி டாக்டர்களை தேர்வு செய்வதற்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்புமருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

         அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு மனுவை பரிசீலிக்க உத்தரவு

               திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருவாரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

          திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் நடைபெறும் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

       அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.-அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உபரிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதில் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணிநிரவல் மூலம் மாற்றப்பட்டனர். அதற்குப்பின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, பொதுமாறுதல் கலந்தாய்வு அக்.,26ல் துவங்குகிறது.இது தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு:


Rajasthan Public Service Commission Recruitment for 13000+ posts of School Lecturer

        Rajasthan Public Service Commission published an advertisement for recruitment of Lecturer for which applications are invited from eligible and desirable candidates. Application form must be submitted Online in prescribed format. Candidatesmay apply Online from 23rd October 2015 and the last date of receipt of applications Online is 23rd November 2015


சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

         ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.


மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

        நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.


பருவ மழை ஆபத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கை-பள்ளிகளுக்குஇயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை

     பருவமழை ஆபத்துக்களில் மாணவர்கள் சிக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, பள்ளிகளுக்கு இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:


அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

         அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்க செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூரில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் அவசர செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


பகுதி நேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்க முடிவு?

      வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணி நிரந்தரம் குறித்து அரசு அறிவிப்புவெளியிடவில்லையென்றால் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.


தீபாவளி சிறப்பு பஸ்கள்: 28ம் தேதி அறிவிப்பு

           சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், 28ம் தேதி நடக்கவுள்ளது. அன்றைய தினம் சிறப்பு பஸ்கள் குறித்த அறிவிப்புவெளியாகும்.


தண்டனை... மாணவருக்கா, ஆசிரியருக்கா?கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது?

       மாதா, பிதா, குரு, தெய்வம் என, தாய், தந்தைக்கு அடுத்தபடியாக, ஆசிரியரை மதித்த காலம் இன்று மலையேறி விட்டது. ஆசிரியரைக் கண்டு மாணவர்கள் பயந்த காலம் போய், இன்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் அஞ்சி நடுங்கத் துவங்கிஉள்ளனர். மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளும் கல்வித் துறை, ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை புரிந்து கொள்வது எப்போது? 

ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுத்தர சிறப்பு பயிற்சி

       மாணவர்களுடன், ஆசிரியர்களுக்கும் ஒழுக்கத்தை கற்று கொடுக்க, வரும், 27ல், சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதிய பள்ளி தொடங்க விண்ணப்பிக்கலாம்

   பெங்களூரு:புதியபள்ளி தொடங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக்கல்வித்துறைவரவேற்றுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கப் பயிற்சி திருவண்ணாமலையில் இன்று தொடக்கம்

       திருவண்ணாமலை மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான இலவச சிறப்பு ஊக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (அக்டோபர் 26) தொடங்குகிறது.இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை மூலம் திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் 150 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு ஊக்கப் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளோடு, கலையையும் காப்பாற்றும் முயற்சி: ஆறு, குளங்களைக் காக்க பொம்மலாட்டப் பிரச்சாரம் - ஊர் ஊராகச் செல்லும் கோவை ஆசிரியர்



அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டம் மூலம் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் ஆனந்தராஜ்.கோவை செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓவியம் மற்றும் சாரணர் ஆசிரியர் ஆனந்தராஜ். இவர் கடந்த 20 ஆண்டு களாக ஊர் ஊராக சென்று, தமிழகத்தின் ஆறு, ஏரி, குளங்கள் மாசுபடுவது குறித்து பொம்மலாட்டக் கலை மூலம் பிரச்சாரம் செய்துவருகிறார்.


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்: நவம்பர் 12-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

      மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அரசின் விருதுகளைப்பெற வரும் நவம்பர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர், வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


மீன்வளத் துறையில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

   மீன்வளத் துறையில் புள்ளியியல் சேகரிப்பாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive