Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அமலுக்கு வராத அரசாணை: பழங்குடியின மாணவர்கள் துயரம்


          கடந்த ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலனுக்காக, அரசாணை வெளியிடப்பட்டது.
 
             அதன் படி, அரசு மற்றும் சுயநிதி, சிறுபான்மை கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில், அவர்கள் அனைத்து கட்டாய கட்டணங்களை செலுத்த தேவையில்லை என, அறிவிக்கப்பட்டது.

                  குறிப்பாக, டியூசன், பதிவு, விளையாட்டு, நூலகம், இதழ்கள் போன்றவற்றிற்கு, கட்ட வேண்டிய எந்த கட்டணத்தையும் கட்டத்தேவையில்லை. இந்த அரசாணை, 2011 - 2012ம் கல்வி ஆண்டிலிருந்து, நடைமுறைப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை. இதனால், ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து, துடி மாணவர் இயக்கத்தின் செயலர் பாரதி பிரபு கூறியதாவது:அரசாணை வந்தவுடன், தமிழகத்தில் மிகப்பெரும் மாற்றம் நிகழும் என, நினைத்தோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், இனி கல்வி கற்பதற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என, மகிழ்ந்தோம்.ஆனால், அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என, கூறி, கல்லூரி நிர்வாகத்தினர் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டனர்.

                 மொத்த கட்டணத்தையும் செலுத்த, கல்லூரி நிர்வாகங்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். பல மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive