Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"டான்செட்" நுழைவு தேர்வு: தகவல் அறிய மையங்கள் அமைப்பு


         முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு (டான்செட்), வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வு பற்றி தகவல்களை, 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மாணவர்கள் பெறலாம் என, டான்செட் செயலர் கூறியுள்ளார்.

           தேர்வு குறித்து டான்செட் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.இ.,- எம்.டெக்., -எம்.ஆர்க்.,- எம்.பிளான்., முதுகலை பட்டப்படிப்புகளுக்கு, அரசு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்கு, "டான்செட்" நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

               சென்னை அண்ணா பல்கலை தேர்வு மையம், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, திண்டுக்கல் பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரி, ஈரோடு சாலை போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி, மதுரை அண்ணா பல்கலை மண்டல மையம், நாகர்கோவில் உறுப்பு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

                இதேபோல், சேலம் அரசு பொறியியல் கல்லூரி, தஞ்சாவூர், குந்தவல்லி நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல மையம், வேலூர் பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, விழுப்புரம் உறுப்பு பொறியியல் கல்லூரி, விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றிலும் மையங்கள் செயல்படும்.

                இவற்றில் தேர்வு குறித்த தகவல்களை மாணவர்கள் பெறலாம். மேலும் விவரங்களை, www.annauniv.edu/tancet2013 என்ற இணையதளத்தில் பெறலாம். ஹால் டிக்கெட் தொலைந்த மாணவர்கள், The Director, Entrance Examinations, Anna University, Chennai என்ற முகவரிக்கு, 100 ரூபாய்க்கு டி.டி., எடுத்து, நகல் ஹால் டிக்கெட்டை பெறலாம். இவ்வாறு டான்செட் செயலர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive