Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு


         "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


          சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:

* சேவை இல்லங்களில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி பயனடைகின்றனர். அதிக பெண்கள் பயன் பெற, 1.38 கோடி ரூபாயில், பெரம்பலூர், கிருஷ்ணகிரியில் புதிதாக சேவை இல்லங்கள் துவக்கப்படும்.
* அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, 2.72 கோடி ரூபாய் செலவில், "தன் சுத்தம் பேணும் சுகாதாரப் பை"கள் வழங்கப்படும்.
* 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில், முன்பருவ கல்விக்கு, உட்புறச் சுவர்களில், விளக்கப் படத்துடன் நீதிக் கதைகள் அச்சிட்டு தரம் உயர்த்தப்படும்.
* சென்னை, தாம்பரம் சேவை இல்லத்தில், ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவியருக்கு, 1 கோடி ரூபாய் செலவில், தங்கும் விடுதி கட்டப்படும்.
* குழந்தைத் திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசார விளம்பரப் படங்கள் தயாரிக்கப்படும்.
* அங்கன்வாடி குழந்தைகளின் எடையை கண்காணிக்க, 50 லட்சம் ரூபாய் செலவில், 2,000 எடை கருவிகள் வழங்கப்படும்.
* ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமாக உள்ள அரியலூரில், முன்னோடி திட்டமாக, ஐந்து மாதங்களுக்கு, 1.29 கோடி ரூபாய் செலவில், சிறு தானியங்களின் கலோரி மதிப்பு குறையாமல், குழந்தைகள் விரும்பும் வண்ணம், தினசரி, 50 கிராம் லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்.
* அரசினர் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில், சூரிய சக்தி உபகரண தெரு விளக்குகள், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
* பெரம்பலூரில், 370 சத்துணவு மையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 3.71 லட்சம் ரூபாய் செலவில், கூடுதலாக, தினசரி, 500 கலோரி ஊட்டச்சத்து கொண்ட உணவு பொருட்கள், 220 வேலை நாட்களில் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive