Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பி.காம்., பாடப்பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்


          அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
 
          தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது. இதையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2013-14ம் கல்வியாண்டில் புதிதாக முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

          கடலூரில் உள்ள அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5,033 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. விண்ணப்பங்கள் வினியோகம் முடிந்துள்ள நிலையில், 3,773 விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, கல்லூரியில் ஒப்படைத்துள்ளனர்.

         கடந்த கல்வியாண்டில் 4,650 விண்ணப்பங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வரும் 24ம் தேதி முதல் துவங்கயுள்ள கலந்தாய்வுக்காக முதலாமாண்டு மாணவ, மாணவிகள் காத்திருக்கின்றனர்.

        கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் பி.காம்., பாடப்பிரிவில் சேர அதிக மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ஆங்கில இலக்கியம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இயற்பியல், கணிதம், விலங்கியல், தாவரவியல், பொருளியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

         இதுகுறித்து கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறுகையில், "கடந்தாண்டை விட இந்தாண்டு விண்ணப்பங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.காம்., பாடப் பிரிவில் சேர ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

         இந்த நிலை பல ஆண்டுகளாவே நீடித்து வருகிறது. இந்தாண்டும் பி.காம்., பாடப் பிரிவில் சேர விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்தப்படியாக பி.பி.ஏ.,பாடப்பிரிவில் சேர விண்ணப்பிப்பார்கள். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் பி.காம்., பாடத்தில் சேர அதிகளவில் விண்ணப்பிக்க காரணமாகும்.

         கடந்தாண்டு இந்த கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பி.காம்.,பாடப்பிரிவைச் சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர்" என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive