Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

4,340 பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திட்டம்: ஆர்.எம்.எஸ்.ஏ. இயக்குனர்


             "தமிழகத்தில் 4,340 பள்ளிகளில் தகவல், தொடர்பு தொழில் நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது" என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் சங்கர் பேசினார்.

              மதுரை வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியில் "இன்ஸ்பையர்டு" விருதுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சார்பில், புத்தாக்க அறிவியல் ஆய்வுத் திட்டமாக (இன்னோவேஷன் இன் சயின்ஸ் பர்சூட் பார் இன்ஸ்பைர்டு ரிசர்ச்- இன்ஸ்பையர்) நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், அனைத்து மாவட்ட கண்காட்சியிலும் தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள், படைப்புகளுடன் பங்கேற்றனர்.

                    கண்காட்சியை கலெக்டர் சுப்ர மணியன், மேயர் ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தனர். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து பேசுகையில், ""மதுரையில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,&'&' என்றார்.

                அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள் வரவேற்றார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் ஏ.சங்கர் பேசியதாவது: இளம் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க, இதுபோன்ற நிகழ்ச்சிகளை முதல்வர் செயல்படுத்துகிறார். கல்வித்துறையில் 4,340 பள்ளிகளில், ஐ.சி.டி., என்னும் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் வளர, புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. 21ம் நூற்றாண்டில் மரபணு பொறியியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவை மனித வளர்ச்சிக்கு பலவகை களில் உதவி வருகிறது, என்றார்.

                   முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, இணை இயக்குனர் செல்லம், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி பங்கேற்றனர். அறிவியல் தொழில் நுட்ப மைய இணை இயக்குனர் சவுந்தரராஜ பெருமாள் நன்றி கூறினார்.
நன்றி : தினமலர்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive