Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிகளில் கணினி வழி கல்வி தொடக்கம்


           தமிழகப் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கணினி மூலம் தொடர்புக் கொள்ளும் வசதி தமிழக பள்ளிக் கல்வித் துறையால் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 4340 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் கணினி வழிக் கல்வி பள்ளிக் கல்வித் துறையால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.
 
              அதன்படி, மேகவழிக் கல்வி முறை இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீபெரும்புத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் மேகவழிக் கல்வி முறையை இன்று 03.10.2013 தொடங்கி வைத்தார்.
 
             இவ்விழாவில் இக்கற்றல் முறைக்குத் தேவையான மடிக்கணினி மற்றும் கையடக்கக் கணினி ஆகியவற்றை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் வளர்மதி வழங்கினார்.விரைவில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல இடங்களில் உள்ள மாணவர்களையும் ஓர் இடத்தில் இருந்த படியே கணினி மூலம் தொடர்பு கொண்டு வகுப்பை எடுக்க இத்திட்டம் ஆசிரியர்களுக்கு உதவுகிறது.மாணவர்கள் தங்களது பணிகளை கணினியில் பதிவேற்றம் செய்தால் அதனை ஆசிரியர் திருத்த முடியும் என்றும், வகுப்பிற்கு ஒரு நாள் ஆசிரியர் வர முடியாவிடில் அவர் எடுக்க வேண்டிய வகுப்பை முன்பே கணினியில் பதிவு செய்து ஒளிபரப்பு செய்யும் வசதி உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




2 Comments:

  1. நல்ல முறை, வரவேற்கதக்கது. இந்த முறையிலுள்ள அதிகப்படியான ஆசிரியர் பணியிடங்களை குறைக்கலாம். அரசு கஜானவிலாவது பணம் மிச்சப்படுத்தலாம்.

    ReplyDelete
  2. OK... Good Method thaan. Aanaal COMPUTER TEACHERS-kku Niraiya Panichchumaiyai Koduthukkkonde Irukkirargal. Niraiya Work athuvum Online Work irukkirathu endru theriyum. COMPUTER TEACHERS NIRAIYA APPOINTMENT SEYYA VENDIYATHU THANE NALLATHU UP TO DATE AAGA IRUPPATHARKKU?!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive