NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: ஐகோர்ட் உத்தரவு


           ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

           விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012 அக்.,14 ல், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் கலை, தமிழ், ஆங்கிலம், கணிதம் என, 4 பகுதிகளை கொண்ட வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. எனக்கு "பி" வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

              டி.ஆர்.பி., இணையதளத்தில் "கீ" பதில்கள் வெளியானது. இதில், 9 கேள்விகளுக்கு தவறாக விடைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு, நான் சரியான விடைகளை எழுதியுள்ளேன். எனக்கு, 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் வேண்டும். "கீ" பதில்கள் தவறாக உள்ளதால், எனக்கு கூடுதலாக 9 மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால், எனது மதிப்பெண் 95 ஆக உயரும், என குறிப்பிட்டார்.

                நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜரானார். தேர்வு வாரிய தலைவர் பதில் மனு செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.




4 Comments:

  1. தற்போது நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை மதிய வல்லுநர் குழு பார்வையிட்டது போலே ஏன் சென்ற அக்டோபரில் நடந்த தேர்வை பார்வையிடவில்லை . இதனால் ஒரு சில மதிப்பெண் இழப்புக்கு காரணம் TRB யே.உளவியல் பாடத்தில் மொழி பெயர்ப்பு மற்றும் விடைகளில் குளறுபடி போன்றவை ஆசிரியர்களை மிகவும் பாதிக்கின்றது. தகுதியை சோதிகின்றோம் என்று கூறி மேல்நிலை வரை கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.மேல்நிலை முடித்து சுமார் 10 வருடங்கள் கழித்து எழுதுபவன் என்ன செய்வான் . மதிப்பெண் சலுகை இல்லை என்று கூறும் TRB கேள்வித்தாளில் ஏன் குளறுபடி செய்கிறது .முதுகலை பட்டதாரி ஆசிரியர் கேள்விதாள் குளறுபடி இருந்தால் மதிப்பெண் கொடுக்கபடுகிறது , அல்லது கேள்வி நீக்க படுகிறது,அல்லது மறுதேர்வு வைக்க படுகிறது .அக்டோபர் 2012 தேர்வு தமிழ் கேள்வி பொருள் தருக என்று கூறி எழுத்து பிழையுடன் கேட்கப்பட்டுள்ளது கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது . அது மட்டுமல்ல இந்தியாவில் ஒரு தலை சிறந்த நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே தகுந்த நடவடிக்கை தமிழக அரசு எடுக்கும் என நம்புகிறோம். பாதிக்க பட்டோர் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் .

    ReplyDelete
  2. When tet result please upload now

    ReplyDelete
  3. tet result eppo sir?

    ReplyDelete
  4. TET exam la sciencestudents,science&maths 2subjects padikanum 60marks ku. aanaa socialstudents,verum social 1subject madum padichaa 60marks esiya vaakalaam. ethu niyaayama? allstudents kum same exam veenum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive