Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2014ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு

          இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

           IES / ISS தேர்வு 2014 - பிப்ரவரி 8ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க மார்ச் 10ம் நாள் கடைசித்தேதி. தேர்வுகள், மே 24 முதல் 26 வரை நடைபெறும்.

NDA & NA தேர்வுகள் (I) 2014 - கடந்த டிசம்பர் 21ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தல் ஜனவரி 20ம் தேதியே முடிந்துவிட்டது. ஏப்ரல் 20ம் தேதி தேர்வு நடைபெறும்.

ஜியாலஜிஸ்ட் தேர்வு 2014 - பிப்ரவரி 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 17. மே 24 முதல் 26 வரை தேர்வுகள் நடைபெறும்.

CISF AC (EXE) LDCE 2014 - மார்ச் 1ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசிநாள் மார்ச் 31. ஜுன் 1ம் தேதி தேர்வு நடைபெறும்.

இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு 2014 - மார்ச் 15ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14. ஜுன் 20 முதல் 22 வரை தேர்வுகள் நடைபெறும்.

ஒருங்கிணைந்த மெடிக்கல் சர்வீசஸ் தேர்வு 2014 - மார்ச் 22ம் தேதி அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஏப்ரல் 21. தேர்வானது ஜுன் 22ம் தேதி நடைபெறும்.

UPSCRT தேர்வுக்காக ஒதுக்கப்பட்டது - ஜுலை 6ம் தேதி தேர்வு நடைபெறும்.

மத்திய ஆயுதப்படை போலீஸ்(AC) தேர்வு 2014 - மே 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் மே 5. ஜுலை 13ம் தேதி தேர்வு நடைபெறும்.

சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வு 2014 - மே 17ம் தேதி அறிவிப்பு வெளியாகும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜுன் 16. தேர்வு நடைபெறும் தேதி ஆகஸ்ட் 24. காலகட்டம்: 1 நாள்.

இந்திய வன சேவைகள் பிரிலிமினரி தேர்வு 2014 (through CS (P) Exam 2014) - மே 17ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜுன் 16. ஆகஸ்ட் 24ம் தேதி தேர்வு நடைபெறும்.

NDA & NA தேர்வு(II) 2014 - தேர்வுக்கான அறிவிப்பு ஜுன் 21ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுலை 21. தேர்வு நாள் செப்டம்பர் 28.

CDS தேர்வு (II) 2014 - தேர்வு அறிவிப்பு ஜுலை 19ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஆகஸ்ட் 18. தேர்வு தேதி அக்டோபர் 26.

இந்திய வனப் பாதுகாப்பு மெயின் தேர்வு 2014 - நவம்பர் 22ம் தேதியிலிருந்து இத்தேர்வு தொடங்கும். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும்.

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு 2014 - டிசம்பர் 14ம் தேதியிலிருந்து இத்தேர்வு நடைபெறும்.

SO / Steno (GD - B/ GD - I) LTD DEPTTL போட்டித் தேர்வு - செப்டம்பர் 20ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் கடைசித் தேதி அக்டோபர் 20. தேர்வானது நவம்பர் 27ம் தேதியிலிருந்து தொடங்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive