Best NEET Coaching Centre

இளம் தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

                இளம் தலைமையாசிரியர்களுக்கு, மூன்று நாட்கள், தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த, இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி, தலைமைப் பண்பு பயிற்சி, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த, பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
          தமிழகத்தில், இரண்டாவது கட்டமாக, இளம் தலைமையாசிரியர்களுக்கு, தலைமைப் பண்பு பயிற்சி, பிப்ரவரி, 3ம் தேதியில் இருந்து, 8ம் தேதிக்குள், மூன்று நாட்கள், அந்தந்த மாவட்டங்களில், நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், உயர் தொழில்நுட்ப முறையில், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.




1 Comments:

  1. தலைமையாசிரியராக பதவி உயர்வுபெற மூத்த ஆசிரியர் மற்றும் துறைத்தேர்வு மட்டுமே தகுதியாக எடுத்துக்கொள்ளாமல்,பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கலாமே! இதை தொடக்கப்பள்ளி,நடுனிலைப்பள்ளி ,உயர் நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி களுக்கு நடைமுறை படுத்தினால் . நல்ல திறமையான தலைமையாசிரியர்கள் கிடைப்பதோடு கல்வியின் தரம் உயரும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive