Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை விவகாரம் - தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தில் புகார்.


         பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு:

           ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும். பள்ளி நிர்வாகத் தினர் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதல் விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய எந்த தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்படவில்லை.பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. முதல் 2 தாள்களில் பொதுப் பிரிவினர் தேர்ச்சி பெற தலா 40 சதவீத மதிப்பெண்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 சதவீத மதிப்பெண் போதுமானது.

              உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் மதிப்பெண் சலுகை வழங்கக் கூடாது என்று உத்தரவிடவில்லை. எனவே, என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குமதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோதம். எனவே, ஆதிதிராவிடர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.




8 Comments:

  1. UNGALAI VARAWEYRKIROM MR.PRINCE. VIDIYUM VARAIL PORADUNGAL.UTHAVI VEYNDUMANAL ALAIPPU VIDNGAL.

    ReplyDelete
  2. Arambichitangada yennada poludhu poche yedhuvum nadakalannu pathen nadandhuruchi nadathitanga

    ReplyDelete
  3. education valara tet avasiam

    ReplyDelete
  4. thanks, welcome . ida othikeettu pirivinarukku mathippen thalarvu thevayillai ena ninaippavargal ella makkalayum ella vithathilum samamaga ninaikkirargala enbathai ninaithu parkka vendum.

    ReplyDelete
  5. தரமான மாணவர்களை உருவாக்க தரமான ஆசிரியர்கள் தேவை. மாணவர்களின்(அனைத்து பிரிவை சார்ந்த) எதிர்காலத்தை சற்று சிந்தியுங்கள்.
    மதிப்பெண் தளர்வு தேவையில்லை. தரமான ஆசிரியரை எப்படி உருவாக்குவது என்று சிந்தியுங்கள். பள்ளியில் அனைத்து பிரிவைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. First tharamana samuthayam unda endru parungal.

      Delete
  6. தரமான மாணவர்களை உருவாக்க தரமான ஆசிரியர்கள் தேவை. மாணவர்களின்(அனைத்து பிரிவை சார்ந்த) எதிர்காலத்தை சற்று சிந்தியுங்கள்.
    மதிப்பெண் தளர்வு தேவையில்லை. தரமான ஆசிரியரை எப்படி உருவாக்குவது என்று சிந்தியுங்கள். பள்ளியில் அனைத்து பிரிவைச் சார்ந்த மாணவர்களும் படிக்கிறார்கள்.

    ReplyDelete
  7. sinthippom/ 3%, 2% mark thalarvu . ithanal onrum thaguthi illamal aagi vidathu.abjekctive [kolkuri] type questionil otrayaa?rettayaa?pottu velpavargalum undu.appai parthal ,tharamana manavargalai uruvakka tharamana asriyargalai niyamanam seya vendum entral 150 ku 140 markukku meyl eduthavargalthan tharamana asriyargal aavargal.appadi ithu varai yaaravathu unda?SOLLUNGAL.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive