மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி
மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட
பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆட்சியர் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார்.நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லையில் சில இடங்களில் மழை பெய்வதை அடுத்து
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக
குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...