Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பயமின்றி தேர்வை சந்தியுங்கள்


          தேர்வு நெருங்கி விட்டது.வீட்டிலும் பள்ளியிலும் மாணவர்களை பல வழிகளில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மாணவர்களிடையே தேர்வு குறித்து ஒருவித பயமும்,தயக்கமும்,விரக்தியும் நிலவி வருவதை காண முடிகிறது. 
        தேர்வுபயத்தையும், தயக்கத்தையும், விரக்தியையும்எப்படிபோக்கிதேர்வில்வெற்றிபெறுவதுஎன்பதனைஇனிஅறிவோம்.பிளஸ்2 மற்றும் 10 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொருமாணவன், மாணவிவாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தி வாழ்வின் தொடக்கத்திற்கு நல்ல பாதையை தருவதுதான்; 10 ஆம் வகுப்பு தேர்வோ ஒவ்வொரு மாணவரும் முதல் முதலில் சந்திக்க இருக்கும் தேர்வாகும். + 2 தேர்வோ ஒவ்வொரு மாணவரின் வருங்கால எண்ணங்களை நிறைவேற்றி கொள்ள அடிப்படையாக விளங்கும் தேர்வாகும். + 2 தேர்வின் முடிவின் அடிப்படையில்தான் ஒவ்வொருவரும் பட்டதாரியாகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, ஆசிரியராகவோ இப்படியே அவரவர் விருப்பபடி வாழ்க்கையில் அடிவைக்க முடியும் ஒருகாலகட்டத்தில் இத்தேர்வினை எழுத மாணவர்கள் முழுக்க முழுக்க பள்ளியையும் ஆசிரியர்களையும் மட்டும்தான் நம்பி இருந்தனர். இன்றோ நிலை முற்றிலும் மாறுப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் தேர்வினை அடிப்டைகளை பல்வேறு இடங்களிலிருந்து பெற முடிகிறது. அவற்றுள்சிலபின்வருமாறு:-
     தினகரன் நாளேடு உட்பட பல நாளேடுகளில் தேர்வு மாதிரி வினாக்கள் வெளிவருகிறது. சின்னத்திரைகளில் நேரடி ஒளிபரப்பு. பல்வேறு அமைப்புக்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துவது. பள்ளிகளிலும் தனி வகுப்பு,விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு என ஏற்பாடு செய்துள்ளது, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் புத்தகம். விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு தனி பயிற்சி புத்தகங்கள்பல கல்வி நிறுவனங்கள் ஒலி,ஒளி நாடா மூலம் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இனையதளம் மூலம் அறிந்து கொள்ளும் ஏற்பாடு. எழுத்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே செயல்முறை தேர்வினை நடத்தி முடிப்பது. இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் மாணவர்களுக்கு தேர்வினை எழுத ஊக்கம் அளிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை என்றாலும், தேர்வு  பயம்,விரக்தி சில மாணவரகளிடையே தவிர்க்க முடியாததாகி உள்ளது.அப்படிப்பட்ட மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற பின் வருவனவற்றை கருத்தில் கொள்ள நல்ல பயன் கிட்டும் வாய்ப்புள்ளது.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்த்து, விடியற்காலையில்தினமும் படிக்க முயற்சித்தல். தேர்வு முடியும் வரை அரட்டை,விளையாட்டு,சின்னத்திரை போன்றவற்றை கூடுமானவரை தவிர்த்தல். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்பதையும், அதிகம் வேலை வாங்குவதையும் அறவே நீக்குதல். ஆசிரியர்கள் மாணவர்களை தனித்தனியாக அனுகி பாட சந்தேகங்களை போக்க துணைபுரிதல் .நண்பர்கள் தோழிகளுடன் பாடம் குறித்து விவாதிப்பது,இவற்றுடன் தேர்வு கூடத்தில் கவனிக்க வேண்டியவைகள். தேர்வறையில் நுழையும்போது எவ்வித பதற்றமுமின்றிஅ ன்றைய தேர்வு சிந்தனையுடன் செல்லவும் வினாத்ததாள் பெற்றவுடன் தேர்வு எழுத தொடங்காமல்,வினாக்களை மீண்டும் மீண்டும் படித்து பார்த்து விடை நன்கு தெரிந்த வினாக்களை தெரிவு செய்து விடை எழுத தொடங்குவது. சிறு வினா,குறுவினாஈகட்டுரை வினா என அறிந்து விடைகளை அளவோடு தெளிவாக தலைப்பிட்டு எழுதவும்.
ஒரு பகுதிக்கான விடைகள் அனைத்தும் ஒரு சேர எழுத வேண்டும்.
வினா எண்ணை கவனமாக மார்ஜன் கோட்டுக்கு வெளியே குறிப்பிடவும்.
ஓரு வினாவிற்கும், மற்றெர்ரு வினாவிற்கும் சரியான இடைவெளி விட்டுஎழுதவும்.
முக்கியம் என கருதும் பகுதிகளை அதே நிற (நீலம்,கருமை) மையிலான் அடிகோடிட்டு காட்டவும். கணிதம்,அறிவியல்,பொருளியல், வரலாறு போன்ற பாடங்களுக்கு தேவையானஇடங்களில் வரைபடம், மாதிரி ஆகியவற்றை செய்யவும்.
தேர்வு என்பது நமது படிப்பின் ஒரு அங்கமாகும்.ஆனால் அதுவே அனைத்துமாகாது.எனவே மாணவர்கள் மன தெளிவுடன் ஒவ்வொரு தேர்வையும் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண் பெற்று உயர் படிப்பில் சேர்ந்து எதிர்கால இந்தியாவை வளமானதாக மாற்றி அமைக்க கூடிய வகையில் அவர்களை தெம்பூட்டி தேர்வுக்கு அனுப்ப பெற்றோரும். ஆசிரியரும், குடும்பத்தினரும்,உறவினரும்,நண்பரும் முன்வரவேண்டியதுஅவசியம்.
கட்டுரை ஆக்கம்.
செ.கருணாகரன்,
எம்.காம்.எம்.எட்..எம்ஃபில்.,எம்எஸ்சி. தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசீய மாணவர் படை அலுவலர் அரசினர் ஆண்கள்மேனிலைப்பள்ளி காவேரிப்பாக்கம்வேலுhர் மாவட்டம்

இக்கட்டுரை தினகரன்நாளேட்டின் பரிசு பெற்ற கட்டுரை.
இன்றோ நமது பாடசாலை போன்ற கல்வி வலைதளங்கள் அனைத்து பாடத்திற்கும் ஏராளமான எளிய தேர்வு வழிமுறைகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.   





4 Comments:

  1. Very Very Useful In-formations at this time. Thanks By S.Ramaraju F/o a +2 Student

    ReplyDelete
  2. Thank u for advices and suggestions

    ReplyDelete
  3. Very Very Useful In-formations FOR Student Thank u for suggestions AND advices

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive