Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு நேரத்தில் பெற்றோர் உதவுவது எப்படி?

 
          மார்ச் 3 ல் பிளஸ் 2தேர்வுகள் துவங்குகின்றன. பள்ளிப் படிப்பின் நிறைவாக நடக்கும் இந்த பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் "வாழ்க்கை பாதையை' தீர்மானிக்கிறது.
 
             உயர் கல்விக்கு பிளஸ் 2 படிப்பே அடிக்கல். இந்த தேர்வை பதட்டம் இல்லாமல் எதிர்கொள்ள ஏதுவாக, மாணவர்களுக்கான, பெற்றோருக்கான"டிப்ஸ்கள்' இந்த பகுதியில் இடம் பெறுகிறது. "நானும் என் மனைவியும், என் மகளுக்கு தோழர்களாக இருந்து அவரின் தேவைகளை நிறைவேற்றினோம்," என கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், மாவட்ட 'ரேங்க்' பெற்ற மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி மாணவி ராஜஸ்ரீயின் தந்தை அர்ச்சுனன் (மதுரை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்) கூறினர்.தேர்வு எழுதப்போகும் மாணவருக்கு, பெற்றோரின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

           தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தந்து, அவர்களை மனரீதியாக ஊக்குவிக்க வேண்டியது பெற்றோர் கடமை.பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று "டிப்ஸ்' தருகிறார், கடந்த ஆண்டின் 'சாதனை மாணவியை' உருவாக்கிய தந்தை அர்ச்சுனன்: முதலில், குழந்தைகளின் இலக்கு என்ன என்பதை பெற்றோர் உணர வேண்டும். இலக்கை நிர்ணயித்து அடைய, பெற்றோர் வழிகாட்ட வேண்டும். எனது மகளுக்கு சிறுவயது முதல் டாக்டர் ஆக வேண்டும் என்பதே இலக்கு. அவளது கனவை நனவாக்க நானும், மனைவியும் பல தியாகங்களை செய்தோம். மாணவர்கள் தங்கள் லட்சியத்தை அடைய, பிளஸ் 2 தேர்வு, ஒரு முக்கிய நுழைவாயில். இதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தேவைப்படும் கூடுதல் புத்தகங்களையும் தேடிச் சென்று வாங்கிக் கொடுத்தேன். குறிப்பாக, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட வினா வங்கி புத்தகத்தை வாங்கி கொடுத்தேன்.

            இதுதவிர, மதுரையில் பிரபல தனியார் பள்ளிகளில் நடந்த திருப்புதல் தேர்வுகளின் வினாத்தாள்களையும், என் நண்பர்கள் மூலம் பெற்று மகளுக்கு கொடுத்தேன்.படிக்கும் போது நாங்கள் அளித்த அறிவுரையில் மிக முக்கியமானது, 'சாய்ஸ்' விட்டு பாடங்களை படிக்க வேண்டாம் என்பது. நூறு சதவிகிதம் பாடங்களை படித்தால் தான், தேர்வில் எப்படி கேட்கும் கேள்விகளுக்கும் பதில் எழுத முடியும். மகள் இரவில் படிக்கும்போது, நானும் என் மனைவியும் மாற்றி மாற்றி ஒருவர் விழித்திருந்து கண்காணிப்போம். காபி, டீ, ஜூஸ் போன்ற மகளின் தேவையை இரவிலும் நிறைவேற்றுவோம். எனது மகள் பிளஸ் 2 வந்தவுடன், வீட்டில் இருந்த 'டிவி' கேபிள் இணைப்பை முதலில் துண்டித்தேன். சினிமா உட்பட அனைத்து பொழுதுபோக்கு விஷயங் களையும் ஓராண்டாக நாங்கள் தியாகம் செய்தோம்.

              தேர்வு நேரத்தில், பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு வகைகள் மிக முக்கியம். இதில், பெற்றோர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுத வேண்டும். மெடிக்கல் படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு கட்ஆப் மார்க் வேண்டும் போன்ற விஷயங்களையும்ஆரம்பத்தில் இருந்தே எடுத்துக் கூறியதால், அதற்கு ஏற்ப, அவர் தேர்வுக்கு தயாரானார். தற்போது, 'டாக்டருக்கு படிக்க வேண்டும்,' என்ற அவரது கனவு நிறைவேறி விட்டது, என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive